நியூட்ரான்-வேகத் தேர்வி

நியூட்ரான்-வேகத் தேர்வி (Neutron-velocity selector) என்பது வரையறுக்கப்பட்ட வேகத்தில் நியூட்ரான்களை கடக்க அனுமதிக்கும் ஒரு சாதனமாகும் ஓர் ஒற்றை நிற நியூட்ரான் கற்றையை உருவாக்க மற்ற அனைத்து நியூட்ரான்களும் உறிஞ்சப்படுகின்றன. [1] பார்ப்பதற்கு இது பல விளிம்புகள் கொண்ட சுழலியின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவ்விளிம்புகள் போரான்-10 போன்ற வலுவான நியூட்ரான்-உறிஞ்சும் பொருளால் பூசப்பட்டிருக்கும். நியூட்ரான்-வேகத் தேர்விகள் பொதுவாக நியூட்ரான் ஆராய்ச்சி செயல்முறையில் நியூட்ரான்களின் ஒரே நிறக் கற்றையை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்கள் மற்றும் மோட்டார்களின் சுழலும் வரம்புகள் காரணமாக, விளிம்புகள் சுழற்சியின் அதிகபட்ச வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒப்பீட்டளவில் இந்த சாதனங்கள் மெதுவாகப் பயணிக்கும் நியூட்ரான்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்ரான்-வேகத்_தேர்வி&oldid=3319448" இலிருந்து மீள்விக்கப்பட்டது