நியூத்திரன் நுண்ணோக்கி

நியூத்திரன் நுண்ணோக்கி (Neutron microscopes) என்பது, குறைந்த கோணமே சிதறலடையும் நியூத்திரன்களை அணுக்கரு பிளவின் மூலம் இலித்தியம்-6 அணுவிலிருந்து பிம்பங்களை உருவாக்கும் கருவியாகும்.

நியூத்திரன் என்பது மின்னூட்டமற்ற துகளாகும். நுண் நோக்கியியலில் பொருட்களின் வடிவமைப்பைப் பெற, மின்னூட்டமற்றதாக இருப்பதால் ஊடுருவிச் செல்வது எளிதாகிறது. நியூத்திரன் நுண்ணோக்கி மூலம் 4 மடங்கு அதிகமாக உருப்பெருக்கம் செய்ய இயலும்.[1] [2]

நியூத்திரன்கள் வலிய இடைவினை மூலம் அணுக்கருவுடன் பிணைக்கப்படுகிறது. இவ்விடைவினை நியூத்திரன்களைச் சிதறடிக்கவோ அல்லது உட்கவரவோ செய்கிறது. நியூத்திரன்கள் கற்றைகள் செறிவு குறைந்துள்ளதாலும், பொருட்களை ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. இவ் வகை நுண்ணோக்கிகள் எக்சு-கதிர் நுண்ணோக்கிகளைப் போன்று செயல்படுகிறது.[1]

எக்சு-கதிர் ஊடுருவிய இடம் கருமையாகத் தெரியும். அதுபோல் நியூத்திரன் பிம்பங்களின் அடர்த்தியானது நியூத்திரன்களை உட்கவரும் அளவைப் பொறுத்தது. ஒவ்வொரு தனிமத்திற்குத் தனிமம், நியூத்திரன்களை உட்கவரும் திறன் வேறுபடுகிறது.[1] நியூத்திரன்கள் மின் சுமையற்றும் சுழற்சியற்றும் இருப்பதால், வெளிக் காந்தப் புலத்தால் எந்த காந்தத்திருப்புதிறனையும் அடைவதில்லை.[1]

பயன்கள் தொகு

நியூத்திரன்கள், எளியத் தனிமங்களின் பிம்பங்களைப் பெற உதவுகிறது.[1]

நியூத்திரன்கள், காந்தப் பொருட்களின் தன்மையை ஆராய உதவுகிறது. நியூத்திரன்கள் மின் சுமையற்று இருப்பதால், காந்தப் புலத்தினாலும், மின் புலத்தினாலும் பாதிப்படைவதில்லை. நியூத்திரன்களின் சுழற்சி, அவற்றை ஒரே திசையில் முனைவாக்கம் (polarization) செய்கிறது. நியூத்திரன்களின் இந்தப் பண்பு, பொருட்களின் காந்தப் பண்புகளைக் கண்டறிய பயன்படுகிறது.[1]

திரவ மின்கலங்கள், இயந்திரங்கள் மற்றும் இதர மின்கலங்கள் ஆகியவற்றை ஊடுருவிச் சென்று, அவற்றின் வடிவமைப்பைக் காண உதவுகிறது. உயிரிப் பொருட்களின் வடிவமைப்பையும் காண உதவுகிறது.[3]

வால்டர் ஆடி (Wolter mirror) தொகு

வில்லைகளும், ஆடிகளும் நியூத்திரன்களை ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் அடையச் செய்வதில்லை. காமா கதிர் தொலைநோக்கி மற்றும் எக்சு-கதிர் தொலைநோக்கி போன்றவற்றில் உள்ளது போல் குறைந்த கோணமே சிதறலடையும் வால்டர் தொலைநோக்கி தத்துவம் நியூத்திரன் நுண்ணோக்கியில் பயன்படுத்தப்படுகிறது.[1]

ஒளியைப் போல நியூத்திரன்கள் முழு அக எதிரொளிப்பு மூலம் பிம்பங்களை உருவாக்குகிறது.[1]

அளவீடு தொகு

நியூத்திரன்களின் பாயம் (neutron flux) மின்னூட்ட இணைப்புக் கருவியில் (Charge-coupled device) பதிவிடப்படுகிறது. நாக சல்பைடு திரையைக் கொண்ட மினுப்பு திரைகள் (scintillation screen) பயன்படுத்தப்படுகின்றன. இலித்தியம்-6 அணுக்கருவிலிருந்து அணுக்கரு பிளவு மூலம் உருவாக்கப்படும் இயக்கப்பட்ட நியூத்திரன்கள் (thermal neutron) மின்னூட்ட இணைப்புக் கருவியில் மோதி பிம்பங்களை உண்டாக்குகிறது.[1]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "What shall we do with a neutron microscope?". Gizmag.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.
  2. Liu, D.; Khaykovich, B.; Gubarev, M. V.; Lee Robertson, J.; Crow, L.; Ramsey, B. D.; Moncton, D. E. (2013). "Demonstration of a novel focusing small-angle neutron scattering instrument equipped with axisymmetric mirrors". Nature Communications 4: 2556. doi:10.1038/ncomms3556. பப்மெட்:24077533. 
  3. "New kind of microscope uses neutrons - MIT News Office". Web.mit.edu. 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூத்திரன்_நுண்ணோக்கி&oldid=2749400" இலிருந்து மீள்விக்கப்பட்டது