நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி
சவ்வுதாக்குத்தொகுதி (membrane attack complex; MAC) என்பது நோய்விளைவிக்கின்ற நுண்ம (பாக்டீரிய) உயிரணுவின் மேற்புறத்தில், ஓம்புயிரின் நிரப்புப்புரத அமைப்பானது மரபார்ந்த நிரப்பு வழி, பதிலீடான நிரப்பு வழி ஆகியவை மூலமாக துரித செயற்பாடடைவதால் உருவாவதாகும். இவை நோயெதிர்ப்பு முறைமையின் செயலாக்கும் புரத அமைப்புகளுள் முக்கியமான ஒன்றாகும். சவ்வுதாக்குத்தொகுதியானது மாறுபக்கச்சவ்வு வழிகளை (transmembrane channels) உருவாக்குகின்றது. இத்தகு வழிகள் இலக்குக்குட்பட்ட தீங்கான உயிரணுக்களின் பாஸ்போகொழுமிய ஈரடுக்குகளை ஊடறுத்து செல் சிதைவிற்கும், அழிவிற்கும் வழி வகுக்கின்றன[1][2].