நிருபமா தேவி
நிருபமா தேவி (Nirupama Devi வங்காள மொழி: নিরুপমা দেবী ) (7 மே 1883 - 7 ஜனவரி 1951) முர்சிதாபாத் மாவட்டம் பகரம்பூரினைச் சேர்ந்த ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். இவரது புனைபெயர் ஸ்ரீமதி தேவி . நிருபமா தேவியின் தந்தை நீதித்துறை ஊழியராக இருந்த நாஃபர் சந்திரா பட்டா ஆவார். இவர் வீட்டில் இருந்து கல்வி கற்றார்.[1]
படைப்புகள்
தொகுஉச்சிரின்கால் இவரது முதல் புதினம் ஆகும். இவரது பிற படைப்புகள் பின்வருமாறு:
- அன்னபூர்ணார் மந்திர் (1913), அதே பெயரிலான திரைப்படத்தினை 1954 இல் நரேஷ் மித்ரா தயாரித்தார்.
- தீதி (1915) (அவரது சிறந்த புதினமாகக் கருதப்படுகிறது) [2]
- அலியா (1917)
- பித்திலிப்பி (1919)
- ஷியாமாலி (1919)
- பந்து (1921)
- அமர் டைரி (1927)
- யுகந்தரேர் கத (1940)
- அனுகர்சா (1941)
விருதுகள் மற்றும் கவுரவங்கள்
தொகுநிருபமா தேவி 1938 இல் 'புவன்மோஹினி தங்கப் பதக்கத்தையும்' 1943 இல் 'ஜகதரினி தங்கப் பதக்கத்தையும்' கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ "Devi, Nirupama - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
- ↑ Women Writing in India: 600 B.C. to the early twentieth century.