நிர்மயா நலக்காப்பீட்டு திட்டம்

இந்திய ஒன்றிய அரசின் திட்டம்

நிர்மயா - நலக்காப்பீட்டு ( Nirmalya Health Insurance ) என்பது ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு நலக்காப்பீட்டுத் திட்டமாகும்.[1] இது தேசிய அறக்கட்டளையின்கீழ் உதவி பெறத் தகுதியான மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்கு வாதம், புற உலக சிந்தனையற்றோர், பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகிய நான்கு வகையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் நிர்மயா என்ற நலக்காப்பீட்டு திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து கொள்ள தகுதியானவர்கள் ஆவர்.

இந்த நான்கு வகையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதற்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை (அ) இருப்பிடச்சான்று, வருமானச்சான்று, புகைப்பட நகல் ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். இதில் வயது வரம்பு இல்லை.[2]

மேற்கோள் தொகு

  1. "Health Insurance for the Disabled". https://www.bankbazaar.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. அனைவருக்கும் கல்வித் திட்டம் - மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - ஆசிரியர் கையேடு