நிர்மலா தேஷ் பாண்டே
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ நிர்மலா தேஷ்பாண்டே உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
நிர்மலா தேஷ்பாண்டே (அக்டோபர் 17, 1929 முதல் 1 மே 2008 வரை ) குறிப்பிடத்தக்க இந்திய சமூக சேவையாளராக இருந்தார். இவர் காந்தியின் தத்துவத்தை தழுவினார். இவர் சிறு வயதிலேயே பெண்கள், பழங்குடியின மக்கள் மற்றும் இந்தியாவில் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் அதற்கான சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.[1][2]. 2006 இல் இந்தியாவின் இரண்டாவது குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்ம விபூசன் பட்டம் பெற்றுள்ளார்.[3] மேலும் இவரது மரணதிற்கு பின்னர் 2010 இல் நமது அண்டை நாடான பாகிஸ்தான் சிதாரா-இ-இம்டியாஸ் என்ற பட்டம் இவருக்கு வழங்கியது. [4]
நிர்மலா தேஷ்பாண்டே | |
---|---|
நிர்மலா தேஷ்பாண்டே | |
பிறப்பு | நாக்பூர், மகாரஷ்டிரா, இந்திய | 19 அக்டோபர் 1929
இறப்பு | 1 மே 2008 | (அகவை 78)
அறியப்படுவது | சமூக செயல்பாடுகள் |
வாழ்க்கை
தொகு1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நாக்பூரில் உள்ள விமலா மற்றும் புருஷோத்தம் யஷ்வந்த் தேஷ்பாண்டே ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 1962 ஆம் ஆண்டில் இவர் தனது எழுத்துப்பணிக்காக மராத்தி மொழியில் சாஹித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். இவர் நாக்பூரில் படித்து அரசியல் அறிவியல் துறையில் எம்.ஏ.பட்டம் பெற்றுள்ளார். இவர் புனேயில் பெர்குசன் கல்லூரியில் படித்துள்ளார். பின்னர், இவர் நாக்பூரில் உள்ள மோரிஸ் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார்.[5]
சமூக செயல்பாடுகள்
தொகுதேஷ்பாண்டே 1952 ஆம் ஆண்டில் வினோபா பாவே நடத்திவந்த பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 40,000 கி.மீ. தூரங்களை பயணித்து கிராம ஸ்வராஜ்ஜ்யம் என்ற காந்தியடிகளின் கொள்கைகளை பரப்பினார். காந்திய கொள்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம் என்று இவர் அறிந்திருந்தார், ஆனாலும் அவ்வாறு செய்வது ஒன்றே உண்மையான ஜனநாயக சமுதாயத்தை நோக்கிச் செல்லும் ஒரே வழி என்று நம்பினார்.[6]
பஞ்சாபில் (பஞ்சாப்) மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் வன்முறைகள் உச்சத்தில் இருந்தபோது அதற்கான சமாதான முயற்சிகளை மேற்கொண்டதில் பெருமளவில் அறியப்பட்டார். 1994 ல் காஷ்மீரின் அமைதிக்காக பாகிஸ்தானைச் சந்திப்பதில் இவர் மேற்கொண்ட முன்முயற்சிகள் ஆகிய இரண்டும் பெரிய பொதுச் சேவை சாதனைகளாகும்.[7] [[திபெத்] ன் மீது சீனாவின் அடக்குமுறையைக் கண்டு மிகவும் துயறுற்றார்..
1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஹரிஜன் சேவாக் சங்க் என்ற அமைப்பின் தலைவராக பதவியிலிருந்தார். மேலும் இவர் பல சமூக அமைப்புகளுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். மேலும், 2004 இல் தேசிய கம்யூனல் ஹார்மனி என்ற விருதினை பெற்றுள்ளார்/[8] 2001 ல், இந்திய பாராளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் 13 நபர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவுக்கு தேஷ்பாண்டே கருணை காட்டினார்.
அமெரிக்காவின் மிச்சிகன், லான்சிங் ஆகிய நகரங்களில் வாழும் இந்திய அமெரிக்கர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுப்பயணத்தில் அமெரிக்காவின் பல நகரங்களை தேஷ் பாண்டே பார்வையிட்டார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008 மே 1 அன்று புது தில்லியில் தூக்கத்திலேயே தனது 79 வயதில் காலமானார்.[5].அவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான ஒத்துழைப்புக்காக தொடர்ந்து பணியாற்றினார். இவரது மரணம் பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்டை சோகத்தில் ஆழ்த்தியது. ராம் மோகன் ராய் என்பவரால் மேற்கொண்ட முயற்சியால், பானிபட் (ஹரியானா) என்ற இடத்தில் இவரது பெயரில் ஒரு சிறிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த அருங்காட்சியகம் இவர் செய்த செயல்களுக்கான மதிப்பையும், மரியாதையையும் நினைவுப்படுத்தப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran Gandhian Nirmala Deshpande is no more". Indian Express. 1 May 2008 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011200333/http://www.expressindia.com/latest-news/Veteran-Gandhian-Nirmala-Deshpande-is-no-more/304110/.
- ↑ "Nirmala Deshpande - a gutsy Gandhian". DNA. 1 May 2008. http://www.dnaindia.com/india/report_nirmala-deshpande-a-gutsy-gandhian_1162223.
- ↑ "Padma Awards". Ministry of Communications and Information Technology.
- ↑ "Next Nirmala Deshpande award ceremony to be held in Pakistan - Times of India".
- ↑ 5.0 5.1 "Veteran Gandhian Nirmala Deshpande dead". CNN-IBN. 1 May 2008 இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320030309/http://ibnlive.in.com/news/veteran-gandhian-nirmala-deshpande-dead/64305-19.html.
- ↑ "The never-say-die crusader". The Tribune. 2 January 2005. http://www.tribuneindia.com/2005/20050102/society.htm#2.
- ↑ "DAWN - Opinion; May 03, 2008". 3 May 2008.
- ↑ "Awards - NFCH". nfch.nic.in.
- ↑ "Muniratnam dedicates his Padma to RASS workers".