நிர்மலா (திரைப்படம்)

நிர்மலா இலங்கையில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் 1968 ஆம் ஆண்டு சூலை 15 இல் வெளியிடப்பட்டது. ஏ. ரகுநாதனின் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தை அருமைநாயகம் என்பவர் நெறிப்படுத்தினார்.[1]

நிர்மலா
நிர்மலா திரைப்பட விளம்பரம் (ஈழநாடு 15-07-1968)
இயக்கம்எஸ். அருமைநாயகம்
தயாரிப்புஏ. ரகுநாதன்
மூலக்கதைதுரையூர் கே. மூர்த்தி
திரைக்கதைநவாலியூர் நடேசன்[1]
வசனம்நவாலியூர் நடேசன்
இசைதிருகோணமலை பத்மநாதன்
நடிப்புஏ. தங்கவேல், சந்திரகலா, ஏ. ரகுநாதன், விஸ்வநாதராஜா, எஸ். எஸ். சின்னையா, கோகிலா ராஜரத்தினம், எஸ். நாகேந்திரம், ஏ. ஆர். சகாப்தீன், எம். ரி. அரசு, துன்னையூர் மகிந்தன், பிரான்சிஸ் ஜெனம், ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ். நாகராசா, ஐசக் செல்வரத்தினம், ஏ. நற்குணசேகரம்
பாடலாசிரியர்முருகையன், சில்லையூர் செல்வராஜன்
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர் (மன்னார்)
படத்தொகுப்புஎஸ். அருமைநாயகம்
கலையகம்சிலோன் ஸ்டூடியோஸ்
விநியோகம்கலாபவன் பிலிம்சு
வெளியீடு1968
நாடுஇலங்கை
மொழிதமிழ்

பாடல்களுக்கான இசையை திருமலை பத்மநாதன் அமைத்திருந்தார். பாடல்களை முருகையன், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1] நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" என்ற பாடல் பல ஆண்டுகளாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ்பெற்ற பாடல் ஆகும்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "நான்காவது உள்ளூர் சினிமாவாக வெளிவந்த 'நிர்மலா'". தினகரன் வாரமஞ்சரி. 1-10-2018. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_(திரைப்படம்)&oldid=3079207" இருந்து மீள்விக்கப்பட்டது