நிர்மால்ய தோசம்
நிர்மால்ய தோசம் என்பது சைவ ஆகமத்தின் படி, சிவன் கோயில்களில் சிவ பெருமானுக்கு படைத்த படையலை, பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுதில்லை. காரணம் நிர்மால்ய (எச்சில்) தோசம் ஏற்படும் என்பதால், சிவன் கோயில்களில் எவ்வித பிரசாதமும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை.[1]
ஆனால் பாஞ்சராத்திர ஆகமத்தின் படி, பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு படைக்கப்படும் படையல்களுக்கு, நிர்மால்ய தோசம் ஏற்படாது என வேதாந்த தேசிகர் கூறியுள்ளதால், பெருமாளுக்கு படைத்த படையல்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.