நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை என்பது நிறப்பிறழ்ச்சி ஏற்படாதவாறு அமைக்கப்பட்ட ஒரு வில்லை தொகுத

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை (achromatic lens) என்பது நிறப்பிறழ்ச்சி ஏற்படாதவாறு அமைக்கப்பட்ட ஒரு வில்லைத் தொகுதி. நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகள் பொதுவாக சிவப்பு மற்றும் நீல நிற அலைகளை ஒரே குவியத்திற்கு கொண்டுவர பயன்படுகிறது.

இவை பொதுவாக வெவ்வேறு நிறப்பிரிகை சக்தி கொண்ட வில்லைகள் இணைத்து உருவாக்கப்படுகிறது. ஒன்று இருகுழி வில்லையாகவும் மற்றொன்று இருகுவி வில்லையாகவும் இருக்கம்.

நிறப்பிறழ்ச்சி தொகு

நிறப்பிறழ்ச்சியினால் (chromatic aberration) வெவ்வேறு நிறங்களின் குவி புள்ளி வெவ்வேறு இடங்களின் இருக்கும். இதனால் நிறங்கள் பிரிக்கப்படுகின்றன.

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லையில் சிவப்பு முதல் நீலம் வரையிலான நிற அலைகளை ஒரே குவியத்திற்கு வந்துள்ளது.

வரலாறு தொகு

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை முதன்முதலில் அமைத்தது செஸ்டர் மூர் ஹால் என்பர்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Daumas, Maurice, Scientific Instruments of the Seventeenth and Eighteenth Centuries and Their Makers, Portman Books, London 1989 ISBN 978-0-7134-0727-3
  2. Watson, Fred (2007). Stargazer: the life and times of the telescope. Allen & Unwin. பக். 140–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74175-383-7. http://books.google.com/books?id=2LZZginzib4C&pg=PA140.