நிறை மின்கடத்தி
நிறை கடத்தி (perfect conductor) அல்லது நிறை மின்கடத்தி (perfect electric conductor, PEC) என்பது தனித்துவமான பொருள் ஒன்றானது முடிவில்லா மின்கடத்தியாகவோ அல்லது பூச்சிய மின்தடையுடையதாகவோ செயல்படுவதைக் குறிக்கும். நிறை மின்கடத்தி இயற்கையாக கிடைப்பதில்லை. இவற்றின் மற்ற பண்புகளுடன் ஒப்பிடும் பொழுது மின்தடை புறக்கணிக்கத்தக்கதாக உள்ளது. உதாரணமாக, காந்தநீரியக்கவியல், மின்சுற்று வரைபடம் ஆகியன.
நிறை மின்கடத்தியின் பண்புகள்
தொகு- நிறை மின்கடத்தியானது பூச்சிய மின்தடையைப் பெற்றிருக்கும்.
- நிலையான காந்தப்பாயத்தைப் பெற்றிருக்கும்.
நிறை மின்கடத்திக்கும் மீக்கடத்திக்கும் உள்ள வேறுபாடு
தொகுமீக்கடத்திகள் பூச்சிய மின்தடை உடையது. மேலும் இவை மெய்சனர் விளைவு, காந்தப்பாயத்தின் சத்திச்சொட்டாக்கல் (quantization) போன்ற குவாண்டம் விளைவுகளை வெளிப்படுத்தும். நிறை மின்கடத்தியில் உள்ளார்ந்த காந்தப்புலம் நிலையானதாக இருக்கும். ஆனால் பூச்சியமானதாகவோ அல்லது பூச்சியமற்றதாகவோ இருக்கலாம்.[1] மீக்கடத்தியில் காந்தப்புலம் பூச்சியமாக இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Henyey, Frank S. (1982). "Distinction between a Perfect Conductor and a Superconductor". Phys. Rev. Lett. 49 (6): 416. doi:10.1103/PhysRevLett.49.416. Bibcode: 1982PhRvL..49..416H.