நிலக்கரி படிமம் வாயு
நிலக்கரி படிம மீத்தேன் வாயு (Coal Bed Methane - CBM) என்பது ஒரு இயற்கை வாயு. இது நிலக்கரியுள் அடங்கியுள்ளது. இது சாதாரண இயற்கை எரிவாயுவிடம் இருந்து சிறிது மாறுபட்டது. நிலக்கரி படிம வாயு ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முக்கிய எரிபொருளாகவும் ஆற்றல் வளமாகவும் உள்ளது. இந்த நிலக்கரி படிம வாயுவானது பிற இயற்கை எரிவாயுக்களை போலல்லாமல், மிக குறைந்த அளவே உயர் ஹைட்ரோகார்பன்களான ப்ரொபேன் மற்றும் ப்யூடேனை கொண்டுள்ளது. இதன் பெரும்பான்மையான பகுதி (90% மேல்) மீத்தேனை கொண்டுள்ளது.