நிலக்கிழாரிய படைகள்
நிலக்கிழாரிய படைகள் எனப்படுவது, பெரும் நிலழக்கிழார்கள் தங்களின் நில மேலாண்மையை உறுதி செய்யும் பொருட்டு தங்களுக்கென அமைத்துக்கொள்ளும் தனிப்பட்ட ஆயுதம் தாங்கிய படையணியைக் குறிக்கும். இது பெரும்பாலும் தங்களின் கீழ் வேலைசெய்யும் அடிமைகள் மற்றும் கூலியாட்களை ஒடுக்கவும், பிற நிலக்கிழார்கள் மற்றும் திருடர்களிடமிருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ளவும் பயன்பட்டது. பண்ணை முறை தோன்றிய காலத்தில் இருந்தே நிலக்கிழாரிய படைகளும் இருக்கின்றன. முடியாட்சிக் காலங்களில் இந்த படைகளுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரங்களும் கொடுக்கப்பட்டன. இருப்பினும், இரண்டாம் உலகப் போரை அடுத்த நவீன குடியரசுகளின் காலத்தில் இவ்வகையான தனியார் படையணிகள் தடை செய்யப்பட்டன.