சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்)
பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் எனப்படுபவை 1970களின் இறுதியில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாதிக்கொன்றாக அமைத்துக்கொள்ளப்பட்ட தனியார் நிலக்கிழாரிய படைகளைக் குறிக்கும். பெரும் நிலக்கிழார்களைக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களால் இந்த படைகள் தோற்றுவிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பீகாரிய உழைக்கும் மக்களிடத்தில் அதிக செல்வாக்கை பெற்றிருந்த பொதுவுடமைவாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயக்கூலிகளுக்கு எதிராக இந்த படைகள் செயல்பட்டன[1][2].
வரலாறு
தொகு1962ல் ஏற்பட்ட இந்திய சீனப் போரை தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிரிந்தது. இது மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. ஆயுதம் தாங்கிய இந்த புரட்சிக் குழுக்கள் முதலில் மேற்கு வங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கின. பின்னர் 1970களின் ஆரம்பத்தில் இவை பீகார் மாநிலத்திலும் தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கின. அடித்தட்டு மக்களின் சார்பாக இயங்கிய இந்த அமைப்புகள், பெரும் நிலக்கிழார்களிடமிருந்த நிலங்களைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தன. இது பெரும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களுக்கு பெரும் நட்டத்தைத் தோற்றுவித்தது. மேலும் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வகையான புரட்சி இயக்கங்களில் சேர்வதும், அவற்றின் பலம் பெருகுவதும் தங்களின் நலனுக்கு எதிரானதாக இம்மக்களால் பார்க்கப்பட்டது.
எனவே இந்த இயக்கங்களை எதிர்க்கும் வகையில் தங்களுக்கான தனியார் படையணியை இம்மக்கள் அமைத்துக்கொண்டனர். இது ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் நிலக்கிழார்களின் கூட்டுப் படையணியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 1979ல் இராசபுத்திரர்களால் அமைக்கப்பட்ட கவுர் சேனா இந்த வகையான நிலக்கிழாரிய படைகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டது ஆகும். 1994ல் ஒருங்கிணைக்கப்பெற்ற ரன்வீர் சேனா இப்படைகளுள் மிகப்பெரியதும், நன்கு கட்டமைக்கப்பட்டதும் ஆகும்[3].
படைகளின் அட்டவணை
தொகு
|
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dinamalar.com/News_detail.asp?Id=478270
- ↑ http://satp.org/satporgtp/countries/india/terroristoutfits/Ranvir_Sena.htm
- ↑ http://satp.org/satporgtp/countries/india/terroristoutfits/Ranvir_Sena.htm
- ↑ http://indiatoday.intoday.in/story/brahmeshwar-singh-took-up-gun-to-avenge-a-failed-plea-for-a-light/1/144199.html
இது தவறான பதிவு அல்ல மிக மிக சரியானது