நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கம்

நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கம் (vertical–horizontal illusion) என்பது, பார்ப்பவர் ஒருவருக்கு, நிலைக்குத்துக் கோடு ஒன்றின் நீளம் அதே அளவு கொண்ட கிடைக் கோடு ஒன்றிலும் பார்க்கக் கூடிய நீளமுள்ளதாகத் தோன்றும் நிலை ஆகும்.[1] இங்கே, ஒரு கிடைக் கோடும் அதை இரண்டாக வெட்டும் இன்னொரு நிலைக்குத்துக் கோடும் உள்ளன. வெட்டும் கோடு வெட்டப்படும் கோட்டைவிட உயரமாகத் தெரிகிறது. இரு கோடுகளும் ஒரே நீளம் கொண்டவை எனப் பார்ப்பவர்களுக்கு முன்பே தெரிந்தாலும் இந்த நீள வேறுபாடு உணரப்படுகிறது.

நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கம்

நிலைக்குத்து - கிடைத் தோற்றமயக்கத்தை உணர்வதில் பண்பாட்டிடை வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். கீழ் நாடுகளிலும், திறந்த நிலப்பகுதிகளிலும் வாழ்பவர்களைவிட மேனாட்டுப் பண்பாடுகளைச் சார்ந்தவர்களும், நகரப் பகுதிகளில் வாழ்பவர்களும் இந்தத் தோற்றமயக்கத்தைக் கூடுதலாக உணர்கின்றனர்.[2]

வகைகள்

தொகு

நிலைக்குத்து - கிடை தோற்றமயக்கத்தைத் தரும் பல வடிவங்கள் உள்ளன. கூடிய அளவில் தோற்றமயக்கம் தரும் வடிவங்களாக மூன்று வடிவங்கள் உள்ளன. அவை, "L" வடிவம், "+" வடிவம், தலைகீழ் "T" வடிவம் என்பன. இவற்றுள் தலைகீழ் "T" வடிவம் கூடிய அளவு தோற்றமயக்கத்தைத் தருகிறது. இதில் வெட்டும் கோடு கிடையாக வைக்கப்படும்போது தோற்றமயக்கத்தின் அளவு குறைகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Robinson, J.O. (1998). The psychology of visual illusion. Courier Dover Publications. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-40449-3.
  2. Shiraev, E., & Levy, D. (2007). Cross-Cultural Psychology, Third Edition. Pearson Education, Inc., page 110
  3. Wolfe, U., Maloney, L.T., & Tam, M. (2005). Distortions of perceived length in the frontoparallel plane: Tests of perspective theories. Perception & Psychophysics, 67(6), 967-979.