நிலைமொழியீற்றசை

நிலைமொழியீற்றசை என்பது செய்யுள் வடிப்பதற்கான யாப்பிலக்கண நெறிகளில் தளையின் அடிப்படை உறுப்புக்களில் ஒன்றாகும். தளை என்பது அடுத்தடுத்து வரும் சீர்களினிடையேயான தொடர்பை நெறிப்படுத்தும். இவ்வாறு வரும் சீர்களில் ஒரு சீரின் இறுதி அசையும் அடுத்து வரும் சீரின் முதலசையும் தளை நெறிக்குட்பட வேண்டும். முன்னர் நிற்கும் சீரை நிலைமொழி எனவும் பின்னர் வரும் சீரை வருமொழி எனவும் குறிப்பிடுவர். நிலைமொழியின் இறுதி அசையே நிலைமொழியீற்றசை எனப்படுகின்றது. இவ்வசைக்கும் வருமொழியின் முதலசைக்கும் இடையேயான ஒலிப்பியல் தொடர்பே தளை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைமொழியீற்றசை&oldid=1733854" இலிருந்து மீள்விக்கப்பட்டது