நிலையான வலைப்பக்கம்
ஒரு நிலையான வலைப்பக்கம் சேமிக்கப்பட்ட பக்கத்தை அப்படியே பயனர்க்கு அனுப்பப்படுகிறது, இதற்கு மாறாக மாறும் வலை பக்கங்கள் ஆனது வலைச் செயலி மூலம் உருவாக்கப்படும் பக்கத்தை பயனர்க்கு அனுப்பப்படுகிறது.
இதன் விளைவாக, ஒரு நிலையான வலைப்பக்கம் ஆனது அனைத்து பயனர்களுக்கும் சேமிக்கப்பட்ட பக்கதில் உள்ள அதே தகவல், அத்தகைய பதிப்புகள், நவீன திறன்களை கொண்ட வழங்கி (Server) மூலம் ஆவணதின் பல்வேறு பதிப்புகள் மற்றும் ஆவணத்தின் மொழி என்பன கட்டமைக்கப்பட்ட முறையில் காண்பிக்கும்.
ஒரு நிலையான வலைப்பக்கங்கள் அநேகமாக மீயுரைக் குறியிடு மொழி (HTML) பக்க கோப்புகளாக சேமிக்கப்பட்டு வலை வழங்கி மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTP) மூலம் கிடைக்கும் படி வைத்திருக்கும் ("URL கள் ஆனது அநேகமாக ".HTML" என்று முடியாவிடின் நிலையான வலைப்பக்கமாக இருக்காது). எனினும், உதிரி விளக்கங்கள் ஆகா, வலை பக்கங்கள் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கலாம், மேலும் வார்ப்புருவை (template) பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதும் வழங்கி மூலம் பகிரப்படலாம் இருந்தும் பக்கம் மாறாமால் இருக்கும் அது சேமிக்கப்பட்ட அடிப்படையில் காண்பிக்கும்.
நிலையான வலைப்பக்கங்கள் ஆனது ஒருபோதும் மாறாத அல்லது அரிதாக மேம்படுத்த வேண்டிய தேவை உள்ள பக்கங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பெரும் எண்ணிக்கையில் நிலையான பக்க கோப்புகளை பராமரித்தல் என்பது தானியங்கி கருவிகள் இல்லாமல் சாத்தியமற்றதாகும். இதன் தனிப்பயனாக்கம் அல்லது பரிமாற்றம் வாடிக்கையாளர் கட்டுப்பாடு ஊடக இயங்கும்.
நிலையான வலைப்பக்கதின் நன்மைகள்:
- மாறும் வலை பக்கங்கள் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்குகிறது
- மாறும் வலைத்தளங்களுடன் ஒப்பிடும் போது இறுதி பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட செயல்திறன்[1]
- பக்கங்கள் இலவசமாக GitHub இல் பக்க வசதியை பயன்படுத்தி சேமித்து கொள்ளலாம்.
நிலையான வலைப்பக்கதின் குறைபாடுகள்:
- மாறும் செயல்பாடுகளை தனியாக சேர்க்க வேண்டும்
உசாத்துணை
தொகு- ↑ "GitHub Pages" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-17.