நிலை உயர்வு (சதுரங்கம்)

நிலை உயர்வு (ஆங்கிலம்: Promotion) என்பது சிப்பாய் எட்டாவது வரிசையைச் சென்றடையும்போது அதே நிறத்தையுடைய ராணி, குதிரை, கோட்டை அல்லது மந்திரியாக அதிகார உயர்வு பெறுதல் ஆகும்.[1] எட்டாவது வரிசைக்குச் சிப்பாய் நகர்த்தப்பட்டவுடனேயே புதிய காய் சிப்பாய் இருந்த இடத்தில் வைக்கப்படும்.[2] அதிகார உயர்வின் மூலம் மேற்கூறப்பட்ட காய்களுள் எந்தவொரு காயையும் பெறலாம்.[3] அதிகார உயர்வு இறுதிக் கட்டத்தில் மிகவும் பயன் தரக் கூடியது.[4]

35ஆவது சதுரங்க ஒலிம்பியாடில் நிலை உயர்வு நிகழும்போது உதவுவதற்காகக் கூடுதல் வெள்ளை அரசி, கறுப்பரசி என்பனவற்றுடன் ஆடப்படும் சதுரங்கப்பலகை

சதுரங்கத்தில் பலமான காய் ராணி என்பதால், அதிகார உயர்வின்போது பெரும்பாலும் ராணியையே தேர்ந்தெடுப்பர்.[5]

அதிகார உயர்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட காய் இல்லாவிட்டால், போட்டியாளர் கடிகாரத்தை நிறுத்தி விட்டு அதனைக் கேட்டுப் பெற வேண்டும். சில போட்டிகளில் ராணி இல்லாதபட்சத்தில், தலைகீழாகக் கோட்டையை வைப்பர்.[6]


வேறுபட்ட காய்களாக அதிகார உயர்வு தொகு

பொதுவாக அதிகார உயர்வின்போது ராணியையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.[7] ஆனாலும் ஏனைய காய்களைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பங்களும் அரிதாக இடம்பெற்றுள்ளன.[8] அவ்வாறு வேறு காய்களைப் பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும்.[9] சில வேளைகளில், அதிகார உயர்வின்போது ராணியைப் பெறுதல் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலையில் வேறு காய்கள் தெரிவு செய்யப்படும்.[10] 2006ஆம் ஆண்டின் செஸ்பேஸ் தரவுத் தளத்தில் உள்ள 3200000 ஆட்டங்களில் 1.5 வீதமான ஆட்டங்கள் அதிகார உயர்வைக் கொண்டுள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களின் சதவீதத்தைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.[11]

காய் சதவீதம்
ராணி 96.9
குதிரை 1.8
கோட்டை 1.1
மந்திரி 0.2

குறை அதிகார உயர்வு தொகு

ஒரு குதிரையாக, மந்திரியாக அல்லது கோட்டையாக அதிகார உயர்வு பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும்.[12] இவை ராணியை விடப் பலம் குறைந்தவையாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் உண்டு.[13]

குதிரையாக அதிகார உயர்வு தொகு

  a b c d e f g h  
8                 8
7                 7
6                 6
5                 5
4                 4
3                 3
2                 2
1                 1
  a b c d e f g h  
குதிரையாக அதிகார உயர்வு பெறுதல் பயனுள்ளது.

ராணியால் நகர முடியாத வழிகளில் குதிரை நகர முடியும் என்பதால், குதிரையாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.[14] அத்தோடு, குதிரையாக அதிகார உயர்வு பெறுதல் குறை அதிகார உயர்வில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமானுவேல் லாஸ்கரால் வழங்கப்பட்ட வலது புறத்திலுள்ள சதுரங்க நிலையில் குதிரையாக அதிகார உயர்வு பெறுவதே சாதகமானது. இந்நிலையில் வெள்ளையானது புள்ளிகளில் பின்தங்கி நிற்கின்றது. e-சிப்பாயானது ராணியாக அதிகார உயர்வு பெற்றாலும் (1.exd8(Q)?இன் மூலம்) வெள்ளையானது புள்ளிகளில் கறுப்பை விடப் பின்தங்கியே நிற்கும். ஆனால், e-சிப்பாயானது 1.exd8(N)+! என்ற நகர்வை மேற்கொள்வதன் மூலம் வெள்ளை கவையொன்றை ஏற்படுத்த முடியும். அடுத்து, கறுப்பு ராஜா நகர்த்தப்பட்டவுடன் 2.Nxf7 என்ற நகர்வின் மூலம் கறுப்பு ராணியைக் கைப்பற்ற முடியும். அதன் பின், வெள்ளை 3.Nxh8 என்ற நகர்வின் மூலம் கோட்டையைக் கைப்பற்றி, கறுப்பை விட ஒரு காய் கூடுதலாக வைத்திருக்க முடியும்.

கோட்டையாக அல்லது மந்திரியாக அதிகார உயர்வு தொகு

ராணியானது கோட்டையினதும் மந்திரியினதும் சக்திகளை ஒருங்கே கொண்டிருப்பதனால் கோட்டையாக அல்லது மந்திரியாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் பெரும்பாலும் முக்கியமற்றது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் ராணியைப் பெறுதல் உடனடியாகச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்த முடியுமென்னும்போது கோட்டையாக அல்லது மந்திரியாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் இடம்பெறும்.

மேற்கோள்கள் தொகு

  1. "விசேட விதிகள்: கோட்டை கட்டுதல், அதிகார உயர்வு மற்றும் வழிமடக்குதல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03.
  2. அதிகார உயர்வு (ஆங்கில மொழியில்)
  3. சதுரங்கத்தின் விதிகள்: சிப்பாய்கள் அகேகே (ஆங்கில மொழியில்)
  4. அதிகார உயர்வு சதுரங்க நகர்வு (ஆங்கில மொழியில்)
  5. ["சதுரங்கம் விளையாடக் கற்போம் (ஆங்கில மொழியில்)!". Archived from the original on 2012-04-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. சதுரங்கம் விளையாடக் கற்போம் (ஆங்கில மொழியில்)!]
  6. சிப்பாய் (ஆங்கில மொழியில்)
  7. ["சதுரங்கம் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2013-04-09. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. சதுரங்கம் (ஆங்கில மொழியில்)]
  8. ["குறை அதிகார உயர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. குறை அதிகார உயர்வு (ஆங்கில மொழியில்)]
  9. ["குறையதிகார உயர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. குறையதிகார உயர்வு (ஆங்கில மொழியில்)]
  10. ["அதிகார உயர்வுகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. அதிகார உயர்வுகள் (ஆங்கில மொழியில்)]
  11. மரபார்ந்த சதுரங்கக் கோட்பாடு III-ஏ-சிப்பாயை நகர்த்தும் வழி (ஆங்கில மொழியில்)
  12. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] குறை அதிகார உயர்வின் வரைவிலக்கணத்தையும் பொருளையும் பார்க்க (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  13. சதுரங்கச் சொல்லடைவு (ஆங்கில மொழியில்)
  14. சதுரங்கப் புதிர் 75 (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலை_உயர்வு_(சதுரங்கம்)&oldid=3733006" இலிருந்து மீள்விக்கப்பட்டது