நில ஒப்படை
வீட்டு மனை மற்றும் நில ஒப்படை (Land Assignment), வீடு மற்றும் விவசாய நிலமற்ற ஏழை குடும்பத்தினருக்கும், நலிந்த சமூகத்தினருக்கும், முன்னாள் போர் வீரர்கள் குடும்பத்தினருக்கும் மற்ற இதர தகுதி வாய்ந்த பிரிவினருக்கும் அரசு நிலங்களை குடியிருப்பு வீட்டு மனைகளாகவோ அல்லது வேளாண்மை நிலங்களாகவோ வழங்குவதே நில ஒப்படை எனப்படும்.
வீட்டு மனை ஒப்படை
தொகுதமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை (தமிழ்நாடு) நிலை ஆணை எண் 21 பிரிவு 1ன்படி பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீட்டுமனை இல்லாதவர்களுக்கு ஒப்படை செய்வது வீட்டுமனை ஒப்படை எனப்படும்.
தகுதிகள்
தொகு- வறுமை கோட்டிற்கு கீழ் வாழக் கூடியவர்கள் இலவச வீட்டு மனை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசாணை நிலை எண்.287 வருவாய் (நிழு 1(2) துறை நாள் 31.5.2000ன்படி குடும்ப ஆண்டு வருமான வரம்பு கிராமப்பகுதிகளில் ரூ.16,000/-எனவும் நகர்புறப்பகுதிகளில் ரூ.24,000/-எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இலவச வீட்டு மனை கோரும் நபருக்கு வீட்டுமனை கோரும் கிராமத்திலோ அல்லது வேறு கிராமங்களிலோ வீட்டுமனையோ வீடோ இருக்கக் கூடாது.
- அரசாணை எண் 2324, வருவாய்த் துறை, நாள் 16.11.90ன் படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ½ செண்டும், நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 செண்டும், ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அதிக பட்சமாக 3 செண்டு வீட்டுமனை ஒப்படை செய்யலாம்.
- வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள வீட்டுமனை இல்லாதவர்களுக்கும் வீட்டுமனை ஒப்படை வழங்கிடலாம். ஆனால் அவர்களின் தகுதி நிலைக்கேற்ப மேற்படி வீட்டு மனையின் சந்தை மதிப்பில் ஒரு மடங்கோ அல்லது இருமடங்கோ வசூல் செய்து கொண்டு ஒப்படை வழங்கலாம்.
வீட்டுமனை ஒப்படைகளில் செய்யக் கூடியதும் / செய்யக்கூடாததும்
தொகு- வீட்டு மனை ஒப்படை குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரிலேயே பட்டா வழங்கப்பட வேண்டும். (அரசாணை எண்.1380 வருவாய்த்துறை நாள்:22.8.89) பெண்கள் இல்லாத குடும்பத்தில் ஆண்கள் பெயரில் பட்டா வழங்கிடலாம்.
- வீட்டு மனை ஒப்படை பெற்ற இனங்களில் ஓராண்டுக்குள் வீடு கட்டப்பட வேண்டும்.
- ஒப்படை பெற்ற வீட்டு மனையை 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்பதற்கு அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.(அரசாணை எண் 2485 வருவாய்த்துறை நாள்:9.11.79)
வேளாண்மை நில ஒப்படை
தொகு- ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலத்தினை, நிலமற்ற ஏழைகளுக்கு வேளாண்மை செய்யும் நோக்கில் ஒப்படை செய்வது “நில ஒப்படை” ஆகும். நஞ்சை நிலம் எனில் ஒன்றை ஏக்கரும், புஞ்செய் நிலம் எனில் 3 ஏக்கரும் நில ஒப்படை செய்யலாம். [1]
- நேர்முக விவசாயத்தில் ஈடுபடக் கூடிய நிலமற்ற ஏழைகள் மட்டுமே இலவச நில ஒப்படை பெற தகுதியானவர்கள். இலவச நிலஒப்படை கோரும் நபருக்கு நில ஒப்படை கோரும் கிராமத்திலோ, வேறு கிராமத்திலோ சொந்தமான நிலம் இருக்கக் கூடாது.
நில ஒப்படை செய்யும் இனங்களில் முன்னுரிமையாளர்கள்
தொகு- போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள் அல்லது பெற்றோர்.
- சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நிலமற்ற ஏழை மக்கள்
- பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
- இராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணவத்தினர் மனைவி.
- நிலமற்ற ஏழைகள்
- நன்டைத்தைக்காக விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகள்
நில ஒப்படைப்பு நிபந்தனைகள்
தொகு- ஒப்படை பெற்ற நிலத்தை ஒப்படை பெற்ற நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்திடவோ, உரிமை மாற்றம் செய்திடவோ கூடாது.
- ஒப்படை பெற்ற நிலத்தில் ஒப்படைதாரரோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ நேரிடையாக விவசாயம் செய்ய வேண்டும். குத்தகைக்கு விடக்கூடாது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வீட்டு மனை மற்றும் நில ஒப்படை பரணிடப்பட்டது 2017-10-24 at the வந்தவழி இயந்திரம்