நிஷா சவுத்ரி

இந்திய அரசியல்வாதி

நிஷா சவுத்ரி(Nisha Chaudhary) (1952-2001) ஒரு அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். 1990 களில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்காந்தா தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக மக்களவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நிஷா இந்திய மாநிலம் ராஜஸ்தானின், துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்லோடாவில் 1952 அம் ஆண்டு செப்டம்பர் 10 ம் நாள் பிறந்தார். இவர் தனக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் 1990 ஆம் ஆண்டில் தனது கணவரை விவாகரத்து செய்தார். 1980 களின் பிற்பகுதியில் இவர் முன்னாள் முதல்வர் அமர்சிங் பி . சவுத்ரியுடன் தோழமையில் இருந்தார். இந்த இணையர் 1991 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் நாளில் திருமணம் செய்து கொண்டனர். அமர்சிங் சவுத்ரி 3 குழந்தைகளுடன் தன்னுடன் வாழ்ந்து வந்த தனது முதல் மனைவி கஜ்ராபனை விவாகரத்து செய்யாமல் இத்திருமணத்தை செய்ததன் காரணமாக பெரும் சர்ச்சை எழுந்தது.[1][2] நிஷா 1996, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2001 ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தின் நடுவில் இறந்தார்.[3]

கல்வி மற்றும் ஆர்வங்கள்

தொகு

நிசா ஒரு முதுகலை சமூகவியல் மாணவர் ஆவார். இவர் ஜெய்ப்பூர், இராஜஸ்தான் பல்கலைக்கழகம், பிலானி பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவார் ஆவார். நிசாவின் பொழுதுபோக்குகளில் பாடுதல், இசை வாசித்தல் மற்றும் பரதநாட்டியம் ஆகியவை அடங்கும். நிஷா ஒரு விளையாட்டு வீரரும் ஆவார். இவர் ஹாக்கி, டென்னிஸ், பூப்பந்து போன்ற பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளார். இவர் தேசிய மாணவர் படையில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா படைப்பிரிவு முகாமிலும் கலந்து கொண்டுள்ளார்.[1]

தொழில்

தொகு

நிசா ஜெய்ப்பூரின் அகில இந்திய வானொலியில் வானொலிக் கலைஞராக பணிபுரிந்தார். மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் தலைவராக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், பின்தங்கிய வர்க்கங்களின், குறிப்பாக பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காகவும் பணியாற்றினார். இவரது வாழ்க்கை முழுவதும் இவர் பல சமூக மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பிலிருந்து, வறியோருக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டில் நிசா இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசியத்தால் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரசின் மதுசூதன் மிஸ்திரி வெற்றி பெற்றார். [3]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 13 February 2014.
  2. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19911015-former-gujarat-cm-amarsinh-chaudharys-second-marriage-creates-a-stir-814940-1991-10-15
  3. 3.0 3.1 https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Sabarkantha-poll-battle-Voters-feel-trapped/articleshow/602348.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷா_சவுத்ரி&oldid=3186841" இலிருந்து மீள்விக்கப்பட்டது