தேசிய மாணவர் படை (இந்தியா)

history

தேசிய மாணவர் படை 16 சூலை 1948 அன்று நிறுவப்பட்டது. லெப். ஜெனரல் தலைமையிலான இப்படையின் தலைமை அலுவலம் புது தில்லியில் உள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இராணுவத்தின் கீழ் தேசிய மாணவர் படை, இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுகிறது. இப்படையில் 10,00,000 முதல் 13,00,000 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகிறார்கள்.

தேசிய மாணவர் படை
राष्ट्रीय कैडेट कोर
செயற் காலம்16 சூலை 1948 - தற்போது வரை
நாடு இந்தியா
பற்றிணைப்பு
வகைதுணை இராணுவப் படைகள்
பொறுப்புசீருடை அணிந்த குழுவினர்
அளவு10,00,000–13,00,000[1]
பகுதிஇந்திய இராணுவம்
தலைமையிடம்புது தில்லி
குறிக்கோள்(கள்)ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்
இணையதளம்
தளபதிகள்
Director Generalலெப். ஜெனரல் குர்பீர்பாஅல் சிங்[2]
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
லெப். ஜெனரல். விக்ரந்த் பிரசேர் [3]
படைத்துறைச் சின்னங்கள்
Flag
தேசிய மாணவர் படையினரின் பயிற்சி

தோற்றம்

தொகு

1942 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு உருவாக்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் பயிற்சிப் படை (University Officers Training Corps (UOTC)) என்பதே, இந்தியச் சட்டப்படி தேசிய மாணவர் படை ஆனதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் XXXI, 1948 இதன் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.[4] இதன் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இம்மூன்றுமே தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர்.ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்த பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.

  • தரைப்படை அணி
  • வான்படை அணி
  • கடற்படை அணி

முகாம்கள்

தொகு
 
தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு
  • இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)
  • தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)
  • வான்படை முகாம் (Vayu Sainic Camp)
  • கடற்படை முகாம் (Nau Sainik Camp)
  • மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)
  • தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)
  • படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)
  • கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)
  • வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)
  • குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)
  • வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)
  • கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)

நாம் தேசிய கேடட் கார்ப்ஸின் கேடட், செய்ய இந்தியாவின் ஒருமைப்பாட்டை எப்போதும் நிலைநிறுத்துவோம் என்று உறுதியுடன்றுதியளிக்கிறோம்

தொகு

ஒழுக்கமான மற்றும் பொறுப்பான குடிமகனாக இருக்க நாங்கள் தீர்மானிக்கிறோம் . இந்தியச் சட்ட முறையில் அறிவிக்கப்பட்ட, ஆங்கில உறுதிமொழி[5] வருமாறு;-

செயற்பாடுகள்

தொகு
 
தேசிய மாணவர் படை முகாம், பஞ்சாப் மாநிலம்.

பள்‌ளி‌ப் பருவ‌த்‌திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌க்கறை செலு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல், இளவயதினரை வ‌ழிநட‌த்த, எ‌ன்‌சி‌சி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவ‌த்‌திலும், காவ‌ல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கக் கூடியது.

தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு, தில்லியில் மகளிர் தேசிய மாணவர் படைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து17 மகளிர் படைப்பிரிவுகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளிலும், பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று சுழற்கோப்பையை தமிழ்நாடு,பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் அடங்கிய மகளிர் அணி வென்றது.[6]

எடுகோள்கள்

தொகு
  1. "Size of NCC" (PDF). Archived from the original (PDF) on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
  2. "DG NCC | National Cadet Corps | India".
  3. "President Ram Nath Kovind presents Shaurya Chakra to Lt Col Vikrant Prasher". Odisha Diary (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
  4. (NCC act XXXI, 1948) பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம் (81ஆங்கிலப் பக்கங்கள் கொண்ட மின்னூல்)
  5. "இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் அமைந்த உறுதிமொழிகள்". Archived from the original on 2011-09-02. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.
  6. தமிழக மகளிர் அணி தேசிய மாணவர் படையினர் வென்றனர்[தொடர்பிழந்த இணைப்பு](ஆங்கில மொழியில்)

சான்றிதழ்கள் பள்ளிக்மகூடங்களில் பயிலும் போது என்.சி.சி.யில் சேர்ந்திருந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றால் எ சான்றிதழ் கி்டைக்கும் . கல்லுாாி அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் பி,சி சான்றிதழ்கள் கி்டைக்கும்.

புற இணைப்புகள்

தொகு