நீக்க வினை

e2 reaction

நீக்க வினை (Elimination reaction) என்பது ஒரு வகை கரிம வேதி வினை ஆகும். இவ்வினையில் மூலக்கூறு ஒன்றில் இருந்து இரண்டு பிரதியீடுசெய் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது ஒரு படி அல்லது இரு படிகளில் நிகழ்கிறது.[1] ஒரு படியில் நிகழும் வினை E2 வினை எனப்படும், இரு படியில் நிகழும் வினை E1 வினை எனப்படும். எண்கள் இங்கு பொறிமுறையின் படிகளின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக எதிர்வினையின் இயக்கவியலைக் குறிக்கின்றன: E2 என்பது இரட்டைமூலக்கூற்று (இரண்டாவது-வரிசை), E1 ஒற்றைமூலக்கூற்று (முதல்-வரிசை) ஆகும்.

நீக்க வினையின் மூலம் சல்புருரிக் அமிலம் மற்றும் வெப்பத்தை பயன்படுத்தி சைக்ளோஹெக்சனால் சைக்ளோஹெக்சினாக மாறுதல்

ஐதரசன் நீக்குதல் (H+) தொகு

பெரும்பாலான கரிம வேதியியல் நீக்க வினைகளில் குறைந்தது ஒரு ஐதரசன் அணு நீக்கமடைந்து இரட்டை பிணைப்பு உண்டாகிறது.

E2 பொறிமுறை தொகு

1920 களில், சர் கிறித்தோபர் இங்கோல்டு விசித்திரமான வேதியியல் எதிர்வினை ஒன்றை விளக்க E2 பொறிமுறையை மாதிரியை முன்மொழிந்தார்: E2 என்பது "இரட்டைமூலக்கூற்று நீக்கத்தைக்" குறிக்கிறது. இவ்வினை ஒரு-படி பொறிமுறையை உள்ளடக்கியது, இதில் "கார்பன்-ஐதரசன்" மற்றும் "கார்பன்-ஆலசன்" பிணைப்புகள் உடைந்து இரட்டைப் பிணைப்பை (C=C Pi bond) உருவாக்குகின்றன.

 
Scheme 1. E2 reaction mechanism

மேற்கோள்கள் தொகு

  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, ISBN 0-471-85472-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீக்க_வினை&oldid=3422787" இலிருந்து மீள்விக்கப்பட்டது