நீக்ரோ
ஆங்கில மொழியில், நீக்ரோ என்பதற்கு ஆப்பிரிக்க கறுப்பின மக்களான நீக்ராய்டுகளைக் குறிக்கும். [1] தற்போது அமெரிக்காவில் இச்சொல்லாடல் தவிர்க்கப்பட்டு, ஆபிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுமுதன் முதலில் 1442-ஆம் ஆண்டில் போர்த்துகேய கடலோடியான வாஸ்கோ ட காமா தென்னாப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர்.[2][3] அப்போது போர்த்துகேயர்கள் சந்தித்த ஆப்பிரிக்க கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைத்தனர். போர்த்துகேயம் மற்றும் எசுப்பானியம் மொழிகளில் நீக்ரோ என்பதற்கு கருப்பு எனப்பொருள். இலத்தீன் சொல்லான நைஜர் என்பதிலிருந்து நீக்ரோ எனும் சொல் பெறப்பட்டது. இதற்கும் கருப்பு என்று பொருள்படும்.
மேற்கு ஆப்பிரிக்காவின் மக்களான நீக்ரோலாண்ட் என்று பெயரிடப்பட்ட பழைய வரைபடங்களில் பயன்படுத்தப்பட்டது, இது நைஜர் ஆற்றின் குறுக்கே நீண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு முதல் 1960-களின் பிற்பகுதி வரை, நீக்ரோ எனும் சொல் கருப்பு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கு சரியான ஆங்கில மொழிச் சொல்லாகக் கருதப்பட்டது. ஆக்ஸ்போர்டு அகராதிகளில், "தற்போது பிரித்தானிய மற்றும் அமெரிக்க ஆங்கிலம் இரண்டிலும் நீக்ரோ எனும் சொல் பயன்படுத்துவதில்லை. [4]
கருப்புத் தோல் கொண்ட அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க வழித்தோன்றல்களை நீக்ரோக்கள் என அழைப்பது மிகவும் கண்ணியக் குறைவான சொல்லாக இருந்தது. அதே சமயம் நீக்ரோக்களின் கறுப்புத் தோல் மிகவும் தாக்குதலாக கருதப்பட்டது. தென் கரோலினாவின் நீக்ரோ சட்டம் (1848) "நீக்ரோ என்ற சொல் அடிமை ஆப்பிரிக்கர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டது. தாராளவாத கலைக் கல்வியை ஆதரிப்பதற்காக அமெரிக்க நீக்ரோ அகாடமி 1897 இல் நிறுவப்பட்டது. 1914-இல் யுனிவர்சல் நீக்ரோ இம்ப்ரூவ்மென்ட் அசோசியசன் நிறுவப்பட்டது. நீக்ரோ வேர்ல்ட் (1918), நீக்ரோ ஃபேக்டரிஸ் கார்ப்பரேஷன் (1919) மற்றும் உரிமைகளின் பிரகடனம் போன்ற கருப்பு தேசியவாதிகள் மற்றும் பான்-ஆப்பிரிக்கவாத அமைப்புகளின் பெயர்களில் மார்கஸ் கார்வே இந்தச் சொற்களைப் பயன்படுத்தினார்.
இருப்பினும் 1950 மற்றும் 1960களில் அமெரிக்கக் கருப்பினத் தலைவர்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்கள் என நினைத்து நீக்ரோ என அழைப்பதை கடுமையாக எதிர்த்தனர். பிற்கால கருப்பின மக்களின் சிவில் உரிமைகள் இயக்கத்திற்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதி வரை "நீக்ரோ" என்பது எக்ஸோனிம் மற்றும் எண்டோனிம்[5] என சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங்கின் மகன் இளைய மார்ட்டின் லூதர் கிங் 1963 ஆம் ஆண்டில் தனது புகழ்பெற்ற "ஐ ஹேவ் எ ட்ரீம்" சொற்பொழிவில் "நீக்ரோ" என்று தம்மை அடையாளம் காட்டினார்.
இருப்பினும் 1950-கள் மற்றும் 1960-களில், சில கறுப்பின அமெரிக்கத் தலைவர்கள், குறிப்பாக மல்கம் எக்ஸ் என்பவர், ஆப்பிரிக்க கருப்பினத்தவரை குறிக்கும் நீக்ரோ என்ற சொல்லை எதிர்த்தனர். ஏனெனில் அவர்கள் அச்சொல்லை அடிமைத்தனம், பிரித்தல் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றோடு தொடர்புடையதுடன், இச்சொல் ஆபிரிக்க அமெரிக்கர்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதியது.[6]
மால்கம் எக்ஸ் என்ற கருப்பினத் தலைவர், தங்களை நீக்ரோ என்று அழைப்பதை விட கறுப்பின மக்கள் என அழைக்கப்படுவதை விரும்பினார். பின்னர் அவர் நீக்ரோ மக்களை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது கருப்பு அமெரிக்கர்கள் எனும் சொல்லால் அழைக்கப்பட விரும்பினார்.[7]
1960-களின் பிற்பகுதியிலிருந்து, நீக்ரோக்கள் குறித்து வேறு பல சொற்கள் பிரபலமான பயன்பாட்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இவற்றில் கருப்பர்கள், கறுப்பு ஆபிரிக்கர்கள், ஆபிரிக்க அமெரிக்கர்கள் என்ற சொல் 1960-களின் பிற்பகுதியிலிருந்து 1990 வரை பயன்பாட்டில் இருந்தது.[8]
நீக்ரோ என்ற சொல் இன்னும் சில வரலாற்றுச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது, அதாவது நீக்ரோ ஆன்மிகம் என்று அழைக்கப்படும் பாடல்கள், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி மற்றும் நடுப்பகுதியில் பேஸ்பால்லின் நீக்ரோ லீக்குகள் மற்றும் யுனைடெட் நீக்ரோ கல்லூரி நிதி போன்ற அமைப்புகள். [9][10] 1932 முதல் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கல்வி இதழ் இன்னும் நீக்ரோ கல்வி ஜர்னல் என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் மற்றவை மாறிவிட்டன: எ.கா. நீக்ரோ வாழ்க்கை மற்றும் வரலாறு பற்றிய ஆய்வுக்கான சங்கம் (1915 இல் நிறுவப்பட்டது) 1973 ஆம் ஆண்டில் ஆப்ரோ-அமெரிக்கன் வாழ்க்கை மற்றும் வரலாற்றைப் படிப்பதற்கான சங்கமாக மாறியது, இப்போது ஆப்பிரிக்க அமெரிக்க வாழ்க்கை மற்றும் வரலாறு பற்றிய ஆய்வுக்கான சங்கம் ஆகும்; அதன் வெளியீடான தி ஜர்னல் ஆஃப் நீக்ரோ ஹிஸ்டரி என்பது ஜர்னல் ஆஃப் ஆப்பிரிக்க அமெரிக்கன் வரலாறு என மாறியது.
மனித இனத்தில் வேறுபாடுகள் இல்லை
தொகுதுவக்கத்தில் மானிடவியலில் அறிஞ்ர்கள் மனித இனத்தை மூன்றாக வகைப்படுத்தப்படுத்தியுள்ளனர். அதில் மஞ்சள் நிறத் தோல் கொண்டவர்களை மங்கோலாய்டுகள் என்றும், வெள்ளை நிறத் தோல் கொண்டவர்களை காகசாய்டுகள் என்றும், கருப்பு நிறத் தோல் கொண்டவ நீக்ராய்டுகள் மற்றும் வகைப்படுத்தினர். தற்போதைய நவீன அறிவியல் அறிஞர்கள், வெளித்தோற்றத்தில் மனிதத் தோலின் நிறத்தில் தான் வேறுபாடுகள் இருப்பினும், மரபியல் அடிப்ப்படையில் அனைத்து மனிதர்களும் ஒரே மனித இனம் என்றும், எனவே மனிதர்களை இன வாரியாகப் பிரிப்பது தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளனர். [11][12]:360
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Negro
- ↑ Thatcher, Oliver. "Vasco da Gama: Round Africa to India, 1497-1498 CE". Modern History Sourcebook. Milwaukee: University Research Extension Co. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
- ↑ "Vasco da Gama's Voyage of 'Discovery' 1497". South African History Online. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
- ↑ "Negro: definition of Negro in Oxford dictionary (British & World English)". Oxforddictionaries.com. Archived from the original on 2022-06-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
- ↑ Endonym and exonym
- ↑ Smith, Tom W. (1992) "Changing racial labels: from 'Colored' to 'Negro' to 'Black' to 'African American'." Public Opinion Quarterly 56(4):496–514
- ↑ Christopher H. Foreman, The African-American predicament, Brookings Institution Press, 1999, p.99.
- ↑ Christopher H. Foreman, The African-American predicament, Brookings Institution Press, 1999, p.99.
- ↑ "UNCF New Brand". Uncf.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
- ↑ Quenqua, Douglas (17 January 2008). "Revising a Name, but Not a Familiar Slogan". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2008/01/17/business/media/17adco.html?ex=1358312400&en=9ea1e9b5b0107c07&ei=5124&partner=permalink&exprod=permalink.
- ↑ American Association of Physical Anthropologists (27 March 2019). "AAPA Statement on Race and Racism". American Association of Physical Anthropologists. பார்க்கப்பட்ட நாள் 19 June 2020.
- ↑ Templeton, A. (2016). EVOLUTION AND NOTIONS OF HUMAN RACE. In Losos J. & Lenski R. (Eds.), How Evolution Shapes Our Lives: Essays on Biology and Society (pp. 346-361). Princeton; Oxford: Princeton University Press. எஆசு:10.2307/j.ctv7h0s6j.26. That this view reflects the consenus among American anthropologists is stated in: Wagner, Jennifer K.; Yu, Joon-Ho; Ifekwunigwe, Jayne O.; Harrell, Tanya M.; Bamshad, Michael J.; Royal, Charmaine D. (February 2017). "Anthropologists' views on race, ancestry, and genetics". American Journal of Physical Anthropology 162 (2): 318–327. doi:10.1002/ajpa.23120.