நீடில்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் நிறுவனம்

நீடில்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (Needle Industries (India) Private Limited) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் எள்ளநல்லி என்ற ஊரில் உள்ள உலகின் பெரிய ஊசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது போனி (PONY) என்ற வணிக முத்திரையில் தன் பொருட்களை சந்தைப்படுத்துகிறது.[1]

நீடில்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 1020 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 0.5 மில்லி மீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய ஊசி முதல், 6 அங்குள அளவுள்ள பிணக்கூறாய்வு ஊசி வரை என 20,000 வகையான ஊசிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஊசிகளில் 70% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து 40 பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஊசிகள் தயாராகின்றன.[1]

வரலாறு தொகு

இந்த நிறுவனமானது 1949இல் வெள்ளையர்களால் துவக்கப்பட்டது. கிராமபோனில் உள்ள ஊசியை தயாரிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு இது முதலில் துவக்கப்பட்டது. 1977இல் இந்த நிறுவனத்தின் பொது மேலாளராக பணிபுரிந்தவரான தியோ தேவஞானம் மூத்தவர் என்பரால் நிறுவனம் வாங்கப்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தில் சுமார் 10 பேர் பணியாற்றி வந்தனர். அதேசமயம் கிராம்போன் பயன்பாடும் குறைந்துவந்தது. அதன் பிறகு கிராம்போன் தயாரிக்கும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல வகையான ஊசிகளை தயாரிக்கத் தொடங்கினர். 1989இல் தியோ தேவஞானம் மூத்தவரின் மகனான தியோ தேவஞானம் இளையவர் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு வந்தார்.[1]

இந்த நிறுவனமானது இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தொழில் நிறுவனத்துக்கான விருதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்றுள்ளது.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 உலகத்துக்கே ஊசி தரும் ஊட்டி! (2016). தினகரன் பொங்கல் மலர் 2016. சென்னை: தினகரன். பக். 230-235. 

வெளி இணைப்புகள் தொகு