நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை

நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா16:1-9 இல் காணப்படுகிறது. இதன் பொருள் சற்றுக் குழப்பத்துக்குரியதாகும்.

உவமை தொகு

செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால் இயல்லாது, பிச்சை எடுத்துண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்" என்று அவர் தமக்குள்ளே சொல்லி. பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்" என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார். பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூடை கோதுமை" என்றார். அவர், "இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று எழுதும்" என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.

பொருள் தொகு

இவ்வுவமையின் அடிக்கருத்தாக பணத்தை ஊடகமாக பயன்படுத்தவேண்டும் என்பதைக் கொள்ளலாம்.

இங்கு செல்வந்தன் பணத்தை சேகரிக்க பாடுபடும் உலக நடப்பை குறிக்கிறான். நீதியற்ற வீட்டுப்பொறுப்பாளர் கிறிஸ்தவரைக் குறிக்கிறது. இவ்வுலக நடைமுறைக்கு ஏற்ப இக் கிறிஸ்தவன் நீதியற்றவனாகும். ஏனெனில் கிறிஸ்தவன் வாழும் உலகத்தின் நடப்பை (பணம்) சேவிக்காமல் இயேசுவை சேவிக்கிறான். அதாவது அவன் இவ்வுலக நடப்பு (பணம்) விரும்பியதுப் போல பணத்தை சேமிக்கவில்லை. மாறாக வேலை முடிந்தபின்னர் (மரணத்தின் பின்) தனக்கு வேண்டிய பாதுகாப்பை பெற பணத்தை பயன்படுத்தினான். ஆனால் இவ்வுவமையில் நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் மற்றவரின் பயன்படுத்தி தனது விடுதலையை தேடிக்கொண்டான். இது பணம்,செல்வம் என்ன கிறிஸ்தவனது அல்ல என்பது பொருளாகும் (அது அவனே உழைத்தது எனினும்).

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்பு தொகு