நீரா ஆர்யா

இந்திய தேசிய இராணுவத்த்தின் வீரர்

நீரா ஆர்யா (Neera Arya) இந்திய தேசிய இராணுவத்தின் வீரராக இருந்தார். அவர் இந்தியத் தரைப்படையின் ஜான்சி ராணி படைப்பிரிவின் ஒரு சிப்பாயாக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நீரா ஆர்யா உத்தரப் பிரதேசத்தின் கெக்ரா நகரில் 1902ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஒரு பணக்கார தொழிலதிபருக்கு பிறந்தார். கொல்கத்தாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். இவர் பிரித்தானிய புலனாய்வு காவல் ஆய்வாளரான ஸ்ரீகாந்த் ஜெய்ரஞ்சன் தாஸ் என்பவரை மணந்தார். [1]

கணவரின் மரணம்

தொகு

நீரா ஆர்யா இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் ஒரு பகுதியாக மாறியதை உணர்ந்த இவரது கணவர் ஸ்ரீகாந்த், தனது மனைவியைக் கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை படுகொலை செய்ய விரும்பினார். இந்தச் செயலை நீரா ஆர்யா மறுத்தபோது, ஸ்ரீகாந்த் ஜெய்ரஞ்சன் தாஸ் நேதாஜியைக் கொல்ல நேதாஜியின் இருப்பிடத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். தோல்வியுற்ற ஒரு கொலை முயற்சியின் போது, ஸ்ரீகாந்த் நேதாஜியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். நேதாஜி துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார். ஆனால் அவரது வாகன ஓட்டுநர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இதையறிந்த நீரா, தனது கணவர் ஸ்ரீகாந்தை குத்திக் கொன்றார்.[2] [3]

திரைப்படம்

தொகு
  • சீனத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாங் ஹுய்ஹுவாங் நீரா ஆர்யாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். [4] [5]

சான்றுகள்

தொகு
  1. Desk, TM News (2020-12-30). "Did you know a brave woman who let her "Breast" cutoff to protect Netaji Subhash Chandra Bose!". Telangana Mata (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  2. "Subhash Chandra Bose: आजाद हिंद फौज की पहली महिला जासूस नीरा आर्या...बचाई नेताजी की जान, पति को किया कुर्बान". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  3. "एक वीरांगना: नेताजी सुभाष चंद्र बोस की जान बचाने के लिए जिसने कर दी थी पति की हत्या, अब पर्दे पर दिखेगी कहानी". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  4. "वीरांगना नीरा आर्य पर फिल्म बनाएंगी चीन की फिल्मकार". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  5. "Google Translate". translate.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரா_ஆர்யா&oldid=3822840" இலிருந்து மீள்விக்கப்பட்டது