நீரின் முரணிய விரிவு
நீரின் முரணிய விரிவு (anomalous expansion of water) என்பது நீரின் எதிர்மறையான, மாறுபட்ட வெப்பநிலை மாற்றத்துடன் தோன்றும் மாற்றமாகும். பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது பொருட்கள் தம் பருமனளவில் விரிவையும், வெப்பநிலை குறையும் போது பருமனளவு குறைவதும் நிகழ்கின்றன. ஆனால் நீரினைப் பொருத்தமட்டில் நிலைமை மாறாக உள்ளது. வெப்பநிலை குறையும் போது 4 °C இல் அதன் அடர்த்தி 1.000 கிராம்\கன செ.மீ. ஆக உள்ளது. மேலும் வெப்பநிலை குறைந்து நீரின் வெப்பநிலை 0 °C ஆக உள்ளபோது அதன் அடர்த்தி 0.99987 கிராம்\கன செ.மீ. ஆகவும் 0 °C-ல் பனிக்கட்டியாக உள்ளபோது அடர்த்தியானது 0.917 ஆகவும் உள்ளது. 4 °C இற்குக் கீழ் வெப்பநிலை குறையும் போது பருமனளவு கூடுகிறது- அதாவது அடர்த்தி குறைகிறது. இதுவே நீரின் முரணிய விரிவாகும்.
இதனால் நன்மையும் தீமையும் ஏற்படுகின்றன. நன்மை யாதெனில் பனிப்படலத்திற்குக் கீழ் நீர், நீராகவே உள்ளது. மீனினங்கள் வாழ இது அவசியமாகிறது. தீது யாதெனில் மிகவும் குறைந்த வெப்பநிலையில் நீர் குழாய்கள் வெடித்து விடுகின்றன.
நீரின் அடர்த்தி அட்டவணை
தொகுவெப்ப அளவு (°C) | அடர்த்தி (கிகி/மீ3)[1][2] |
---|---|
+100 | 958.4 |
+80 | 971.8 |
+60 | 983.2 |
+40 | 992.2 |
+30 | 995.6502 |
+25 | 997.0479 |
+22 | 997.7735 |
+20 | 998.2071 |
+15 | 999.1026 |
+10 | 999.7026 |
+4 | 999.9720 |
0 | 999.8395 |
−10 | 998.117 |
−20 | 993.547 |
−30 | 983.854 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, D. R. (Ed.) (1990). CRC Handbook of Chemistry and Physics (70th Edn.). Boca Raton (FL):CRC Press
- ↑ Water – Density and Specific Weight. Engineeringtoolbox.com. Retrieved on 2011-11-22