நீரோவின் விருந்தினர்கள் (ஆவணப்படம்)

நீரோவின் விருந்தினர்கள் ( Nero's Guest) என்னும் ஆவணப்படத்தை தீபா பாட்டியா இயக்கியுள்ளார். நாட்டில் உள்ள விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகவும், நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன. கடந்த ஆண்டுகளில் லட்சம் உழவர்கள் வாழ்வைத் தொலைத்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பியிருந்த குடும்பங்கள் நடுவீதியில் நிற்கின்றன. ஆனால், இந்த ஊடகங்கள் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மீடியாக்களின் கேமிராக்கள் இவர்களின் பக்கம் திரும்ப மறுப்பதில் ஒரு வர்க்க அரசியல் ஒளிந்து கிடக்கிறது.

ஆனால் பொருளாதார அறிஞர் அமிர்தியா சென்னால் பஞ்சம் பட்டினி குறித்த உலக அறிஞர்களுள் ஓருவர் என வருணிக்கப்பட்ட இந்து பத்திரிகையின் கிராமப்புற பிரச்சனைகளுக்கான செய்தி ஆசிரியரான சாய்நாத், தனது குழுவினருடன் நாடு எங்கும் அலைந்து திரிந்து இந்தப்பிரச்சினை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமது எழுத்து, உரைகளின் வழியே இப்பிரச்சினை கவனப்படுத்தி உள்ளார். இந்தப் படம் அந்தத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீரோவின் விருந்தினர்கள் என்ற இப்படம் இந்திய உழவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் கதை.

வெளி இணைப்புகள்

தொகு