நீர்சார் சூழல் மண்டலம்

நீர்நிலையில் உள்ள சூழல் மண்டலம்

நீர்சார் சூழல் மண்டலம் என்பது நீர்நிலைகளில் காணப்படும் சூழல் மண்டலங்கள் ஆகும். இதில் ஒன்றில் ஒன்றும், தம்முடைய சூழலிலும் தங்கியிருக்கும் பல்வேறு உயிரினங்கள் நீர்சார் சூழல் மண்டலத்தில் வாழ்கின்றன.

ஒரு கயவாயின் கழிமுகமும் கடல்நீரும்; இவை ஒரு நீர்சார் சூழல் மண்டலமாகின்றன.

நீர்சார் சூழல் மண்டலத்தின் வகைகள் தொகு

நீர்சார் சூழல் மண்டலங்களை இரண்டு பொதுவான பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை கடல்சார் சூழல் மண்டலம், நன்னீர்ச் சூழல் மண்டலம் என்பனவாகும்.

உவர்நீர்ச் சூழல் மண்டலம் தொகு

கடல்சார் சூழல் மண்டலம் புவி மேற்பரப்பின் 71% இல் பரந்துள்ளதுடன் உலகிலுள்ள நீரின் 97% அளவையும் தன்னுள் அடக்கியுள்ளது. உலகின் தேறிய முதன்மை உற்பத்தியின் 32% இங்கிருந்தே கிடைக்கிறது. கடல்சார் சூழல் மண்டலத்தில் கரைந்துள்ள சேர்வைகளினால், முக்கியமாக உப்பினால், இது நன்னீர் சூழல் மண்டலத்தில் இருந்து வேறுபடுகின்றது. கடல்நீரில் கரைந்துள்ள பொருட்களில் ஏறத்தாள 85% சோடியமும், குளோரீனும் ஆகும்.

நன்னீர்ச் சூழல் மண்டலம் தொகு

இது புவி மேற்பரப்பின் 0.8% அளவை மூடியுள்ளதுடன் உலக நீர் அளவின் 0.009% அளவையும் தன்னுள் அடக்குகிறது. நன்னீர்ச் சூழல் மண்டலம் உலகின் அறியப்பட்ட மீன் இனங்களில் 41% அளவைக் கொண்டுள்ளது.