நீர்த்தடுப்புத் தண்டு
நீர்தடுப்புத்தண்டு அல்லது இடைமறிக்கும் நீர்நெறிச் சுவர் (Waterbar) என்பது, சாய்வான வனப்பகுதியில் பாய்ந்தோடி வரும் நீரால் ஏற்படும் மண்ணரிப்பினைத் தடுப்பதற்காகவும், நீரோட்டப் பாதையை நேர்செய்வதற்கும், நீரோட்ட அணுகல் பாதையின் அளவைக் குறைப்பதற்காகவும் சிறப்பான கட்டுமான அமைப்பைப் பயன்படுத்தி ஏற்படுத்தப்படுவதாகும். மூலைவிட்ட அமைப்பை கொண்ட இக்கட்டுமானம், நீரோட்டப் பாதையை திசைதிருப்பி, நிலையான வாய்க்காலில் திருப்பிவிடுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்படும் இவை போன்ற நீர்தடுப்புத்தண்களால் பெரும் கொள்ளளவிலான நீரானது சாலையில் வீணாவது தடுக்கப்படுகின்றது. நீர்த்தடுப்புத்தண்டு ஏற்படுத்தப்படவில்லை எனில் வெள்ளப்பெருக்கின் போது பல வளங்களும் அடித்துச்செல்லுதல், சாலைகளின் சீர்கேடு முதலிய அபாயங்கள் ஏற்படும்.
இந்த வாய்க்கால் ஏற்படுத்தப்படாவிட்டால் பெருமளவிலான நீரானது சாலை வழியாக செல்லும். இவ்வாய்க்கால் செல்லும் பாதையைச் சரியான முறையில் பராமரித்து, முறையான கண்காணிப்பை உறுதியாக மேற்கொண்டு, வண்டல் படிவுகளிலிருந்தும், வேறுவகையான தடைகளிலிருந்தும் பாதுகாத்தல் அவசியமானதாகும்.
பொதுவாக குறிப்பிட்ட வடிவில் நீர்த்தடுப்புத்தண்டுகள் சாலைகளின் குறுக்கே அமைக்கப்படுகின்றன. இவை வாகனங்கள் கடந்து செல்ல சற்றே கடினமானதாக அமைகின்றன. மலைப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் நான்கு சக்கர வாகன இயக்கி மூலமாக இவற்றை எளிதில் கடக்கலாம். பொதுவாக மழைப்பொழிவு அதிகம் இருக்கக்கூடிய மலைப்பகுதி நிலப்பரப்புகளிலும், வனப்பகுதி சாலையின் குறுக்கேயும் நீர்ப்பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- Mark A Lange (1999-08-14) (PDF). Insert Water Bar 1. State of New York Lake George Park Commission. http://www.lgpc.state.ny.us/WaterBar.pdf.
- aismac (1999-06-22) (PDF). Water Bar. Center for Sustainable Design, Mississippi State University. http://www.lgpc.state.ny.us/WaterBar.pdf.