நீர்மட்ட நீளம்
கப்பல் அல்லது படகு ஒன்றின் நீர்மட்ட நீளம் (Waterline length) என்பது, அது நீர்மட்டத்தைத் தொடும் இடத்தில் அளக்கப்படும் நீளத்தைக் குறிக்கும். இது கப்பலின் நீர்மட்டத் தொடு பரப்புக்கு வெளியே நீண்டிருக்கும் பகுதிகளின் நீளங்களை உள்ளடக்குவதில்லை. பெரும்பாலான கப்பல்களின் நீர்மட்டத்துக்கு மேலிருக்கும் பகுதிகள் முன்புறமும், பின்புறமும் நீண்டிருப்பது வழக்கம். இதனால், கப்பலின் மொத்த நீளம், நீர்மட்ட நீளத்திலும் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலாக இருப்பதுண்டு. முன்புறம் சரிவாக அமைந்த கப்பல்களில் மிதப்புயரத்தைப் பொறுத்து நீர்மட்ட நீளம் மாற்றம் அடையும். இதனால், நீர்மட்ட நீளம் ஒரு குறித்த அளவு சுமையேற்றிய நிலையிலேயே அளக்கப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Note: originally Load Waterline Length
- ↑ "Improve performance by understanding boat design". Practical Boat Owner. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.