நீர்வழிப் படூஉம்

நீர்வழிப்படூஉம், 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும்.[1] இந்நாவல் தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட எழுத்தாளர் தேவிபாரதியால் எழுதப்பட்டதாகும்.[2][3] நற்றிணை பதிப்பகம் நாவலை வெளிட்டது.

நீர்வழிப்படூஉம்
நூல் பெயர்:நீர்வழிப்படூஉம்
ஆசிரியர்(கள்):தேவிபாரதி
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:220
பதிப்பகர்:தன்னறம் நூல்வெளி

கதைக்களம்

தொகு

நீர்வழிப்படூஉம் என்பதன் அர்த்தம், நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பதுமாகும். ஈரோட்டுக்கு அருகிலுள்ள உடையாம்பாளையம், நாச்சிபாளையம், ரங்கபாளையம், தாராபுரம், வெள்ளகோயில் போன்ற எழுத்தாளர் முன்னதாக வசித்து வந்துள்ள ஊர்களை மையமாகக் கொண்டு, தனது அழிந்துபட்ட கிராமத்தின், குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதத்தைத் தொழிலாகக் கொண்ட மக்களின் கதையாக இப்புதினத்தை எழுத்தாளர் எழுதியுள்ளார்.

நாவிதச் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் காரு என்ற தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அதன் மூலமாக நொய்யல்கரை மனிதர்களின் வாழ்வுப்புலத்தையும், அவர்களின் உள்மன உளவியல் சிக்கல்களையும் அங்குள்ள சமூகப் பின்னணியாகக் கொண்டு, இப்புதினத்தின் கதைமாந்தர்கள் புரியும் தவறுகளையும் அவற்றை மன்னிக்கப்படுவதின் மூலம் அத்தனைக் குறைகளோடும் பிறர் ஏற்றுக்கொள்வதையும் வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டினாலும் வாழ்வில் தங்களுக்கான சிறிய சிறிய ஆசுவாசத்தை, நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்வதையும், அதன்வழியே காருவுடன் இச்சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவையும் ராசன் என்பவர் கதைசொல்வதாக சித்தரிக்கிறது இப்புதினம்.

குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்பதை அடிநாதமாகக் கொண்டுள்ள இப்புதினத்தை தமிழின் மூத்த எழுத்தாளர்களும், வாசகர்களும் உண்மைக்கு நெருக்கமான தன்வரலாற்றுத் தன்மைகொண்டது என விமர்சித்துள்ளனர்.[4]

விமர்சனங்கள்

தொகு
  • இப்புதினம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியான மதிப்புரை: [5]
  • இப்புதினம் பற்றி தேவகாந்தனின் மதிப்புரை

மேற்கோள்கள்

தொகு
  1. "சாகித்திய அகாதமி விருதுகள் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2023/dec/21/sakhitya-akademi-awards-announcement-4126489.html. பார்த்த நாள்: 21 December 2023. 
  2. "நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/1170874-sahitya-akademi-award-to-writer-devi-bharathi-for-novel-neervazhi-paduum.html. பார்த்த நாள்: 21 December 2023. 
  3. "எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/sahitya-akademi-award-to-tamil-writer-devibharathi. பார்த்த நாள்: 21 December 2023. 
  4. "புத்தக அறிமுகம்". {{cite web}}: Text "தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’" ignored (help)
  5. "தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…". https://www.jeyamohan.in/165326/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வழிப்_படூஉம்&oldid=3850533" இலிருந்து மீள்விக்கப்பட்டது