நீர்வேலி கந்தசுவாமி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீர்வேலி கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீர்வேலி எனும் கிராமத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலிருந்து மேற்காக 100 மீற்றர் தூரத்தில்அமைந்துள்ள ஓர் முருகன் கோயில் ஆகும்.
நீர்வேலி கந்தசுவாமி கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அருள்மிகு கந்தசுவாமி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாநிலம்: | யாழ்ப்பாணம் |
அமைவு: | நீர்வேலி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கந்தன் |
வரலாறு
தொகுநீர்வேலிக் கிராமம் முற்று முழுதாக முருக வழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்தில் சைவ சமயத்தவரைத் தவிர்ந்த பிற மதத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை பாரம்பரியமாகக் காணப்பட்டது. அன்னியராட்சிக் காலத்தில்கூட இக்கிராமத்தில் மக்கள் மதம் மாறவில்லை. இக்கிராமத்து பாரம்பரிய வரலாற்றில் முக்கிய அம்சமாக பொது மக்களின் நாமங்கள் கந்தபுராணத்தை மையமாகி இதனை கட்டினர்
அமைக்கப்பட்ட வரலாறு
தொகு1852 இல் கந்தப் பெருமானது விக்கிரம் கொடிகாமத்திலிருந்து கொண்டு வரப்பட்டுக் கோவில் அமைக்கப்பட்டு கந்தையினார் நல்லயினார் என்னும் சகோதரர் இருவரால் பரிபாலிக்கப்பட்டு வந்தது 1896 இல் மூவர் கொண்ட தர்ம கர்த்தாசபையும் 1918 இல் அறுவர் கொண்ட தர்ம கர்த்தாசபையும் பரிபாலனத்தைத் தொடர்ந்தன. 1968இல் புதிய பரிபாலன சபை தோற்றம் பெற்றது. பிரதேச காரியாதிகாரி முன்னிலையில் நிர்வாக யாப்பு தயாரிக்கப்பட்டு பரிபாலனசபை அமைக்கப்பட்டது. இப்பரிபாலன சபை மூன்றாண்டுக்கு ஒரு முறை புதிய அலுவலரைத் தெரிவுசெய்து ஆலயத்தினைச் செவ்வனே பரிபாலித்து வருகின்றது. ஆரம்பத்தில் 10 நாள் மகோற்சவமும் 1924 இல் கும்பாபிஷேகமும் நடந்த பின் உற்சவநாள்கள் அதிகரிக்கப்பட்டன.
ஆலயத்திருப்பணி
தொகுஆலயத் திருப்பணிகளில் தேர்த்திருப்பணி முதன்மையானது. 1975 காலப்பகுதியில் ஆரம்பித்த இத்தேர்த்திருப்பணி ஊர்மக்களின் காணிக்கையில் திருநெல்வேலி சிற்பக்கலைஞர். திரு. கந்தசாமி அவர்களின் கைவண்ணத்தில் மிகவும் சிறப்பாக நிறைவேறியது.
கோபுரத்திருப்பணி
தொகு2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி நல்லை ஆதின இரண்டாவது குருமகாசன்னிதானம் முன்நிலையில் அடிக்கல் நாட்டல் பெற்று துரிதமாக வேலை நடைபெற்று 2006ஆம் ஆண்டு இராஜ கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது
வெளி இணைப்புக்கள்
தொகுநீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு பரணிடப்பட்டது 2015-04-14 at the வந்தவழி இயந்திரம்
நீர்வேலி கந்தசாமி கோவில் பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம்
வருடப்பிறப்பில் தேரேறிவரும் முருகனே..(சிறப்பு) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்