நீலகண்ட ஸ்ரீராம்

நீலகண்ட ஸ்ரீராம் (Nilakanta Sri Ram, டிசம்பர் 15, 1889 - ஏப்ரல் 8, 1973) இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இருபது ஆண்டு காலம் இவர் விடுதலைக் கட்டுநர் ஆகவும், பிரம்மஞானியாகவும் அடையார் பிரம்மஞான சபையின் தலைவராகவும் இருந்தார்.

என். சிறீராம்
பிறப்புநீலகண்ட ஸ்ரீராம்
திசம்பர் 15, 1889(1889-12-15)
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 8, 1973(1973-04-08) (அகவை 83)
சென்னை, தமிழ்நாடு
பணிவிடுதலைக் கட்டுநர்
பிள்ளைகள்ராதா பர்னியர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் தனது ஆரம்ப காலங்களில், அன்னி பெசண்ட் அம்மையாரின் கீழ் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் மதனப்பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசபிகல் கல்லூரியிலும், பெங்களூரில் உள்ள தேசிய பள்ளியிலும், சென்னையில் இந்திய தேசிய பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக இருந்தார்.

பிரம்மஞான சபையில் இவர் பணியாற்றிய இருபது ஆண்டுகளில் பல முக்கியமான மாற்றங்களைக் சொசைட்டியின் பணிகளிலும், அங்கு பணியாற்றிய சக பணியாளர்கள் மத்தியில் அவர்கள் சபையில் செயல்படும் முறைகளிலும் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரது சாதனை உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது; ஏனெனில் மனித ஜீவியத்தைத் திருவுறுமாற்றுவதற்கான பாதைகள் சூட்சுமமாக மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இவரது பணிக்காலத்தில் மட்டுமே மனித ஜீவியத்தைத் திருவுறுமாற்றுவதற்கான பாதைகள் சீரிய நெறிமுறைகளாக வெளியிடப்பட்டது. தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனத் தலைவரான கலொனல் ஓல்காட்டுடன் கலந்து ஆலோசித்த கடைசி தலைவராகவும் திகழ்ந்தவர் நீலகண்ட ஸ்ரீராம் ஆவார். சொசைட்டியின் மூலநோக்கங்களை வரலாற்று பூர்வமாகவோ, பணிநிமித்தமாகவோ மட்டுமின்றி ஆன்மீகமாக அனைவரிடமும் புரிய வைத்த பெருமை இவரையேச் சாரும். 1953ல் அடையாறு தியோசாபிகல் சொசைட்டியின் தலைவராகச் செயல்பட்ட இவர் 1973ல் இயற்கை எய்தும்வரை அப்பணியில் தொடர்ந்தார். Le Droit Humain னின் உறுப்பினராகவும் இவர் திகழ்ந்தார். இவரது மகள் ராதா பர்னியர் 1980 ஆம் ஆண்டு முதல் 2013 வரை அடையாறு தியோஸ்சிக்கல் சொசைட்டியின் ஏழாவது தலைவராக இருந்தார்.

குறிப்பிட்ட பங்களிப்புகள்தொகு

 • An approach to reality. Theosophical Publishing House, Madras 1968
 • On the watch tower, selected editorial notes from The Theosophist, 1953-1966. Theosophical Publishing House, Madras 1966
 • The human interest and other addresses and short essays. Theosophical Publishing House, Wheaton 1968
 • A Theosophist Looks at the World Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1950.
 • An Approach to Reality and Man. Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1951.
 • Man, His Origins and Evolution, Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1952.
 • Thoughts for Aspirants, Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1957.
 • On the Watch Tower, Selected Editorial Notes from "The Theosophist, 1953-1966". Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1966. A compilation of his articles.
 • The Human Interest and Other Addresses and Short Essays. Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1968, and previous edition published around 1951.
 • Life's Deeper Aspect, Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1968.
 • Seeking Wisdom Adyar, Chennai, India: Theosophical Pub. House, 1969.
 • The Nature of Our Seeking, 1973.
 • The Way of Wisdom, Adyar, Chennai, India: Theosophical Publishing House, 1989.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_ஸ்ரீராம்&oldid=2722860" இருந்து மீள்விக்கப்பட்டது