நீலக்கால் நண்டு
நீலக்கால் நண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | Crustacean
|
வகுப்பு: | Malacostraca
|
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. sapidus
|
இருசொற் பெயரீடு | |
Callinectes sapidus Rathbun, 1896 | |
வேறு பெயர்கள் [1] | |
|
நீலக்கால் நண்டு (Callinectes sapidus or Chesapeake or Atlantic blue crab) என்பது கிரஸ்தேசியன் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.இவ்வகை நண்டு மேற்கு அட்லாண்டிக் கடல் பகுதியிலும் மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளிலும் மெக்சிகோ வளைகுடாப்பகுதிகளிலும் காணப்படுகிறது. உலகில் பல இடங்களில் பிடிபடும், அதிலும் பாக்கு நீரிணைப் பகுதியில் இந்த வகை நீலக்கால் நண்டுகளை அதிகளவில் காணலாம், தென் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இந்த பகுதியில் நீலக்கால் நண்டுகளைப் பிடிக்கின்றனர். இந்த வகை நீலக்கால் நண்டுகள் மேற்கத்திய நாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
நாச்சிகுடா நண்டு
தொகுஇந்த வகை நீலக்கால் நண்டை இலங்கை மீனவர்கள் நாச்சிகுடா நண்டு என்று சொல்வார்கள், நாச்சிக்குட என்பது பாக்கு நீரிணையில் மன்னார் தொடக்கம் பூநகரிவரை இலங்கை பக்கமாக இருக்கும் ஒரு குடாவாகும். அதேவேளை தமிழ்நாட்டின் கோடியாகரை போன்ற இடங்களிலும் இந்த நண்டு அதிகமாக பிடிக்கப்படுகின்றன. இந்த பிரதேசத்தில் இந்தவகை நண்டு மாரி காலங்களில் பெருமளவாக பிடிபடும். இரண்டு நண்டுகள் ஒரு கி.கிராம் அளவுக்கு இதன் நிறை இருக்கும், மற்ற வகை நண்டுகளை விட இந்த நண்டு சுவையாகவும், நண்டு குழம்பின் வாசனையும், நண்டு தசைகளும் அதிகமாக இருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்தவகையில் இந்த நண்டு விலை கொஞ்சம் அதிகம்தான், அதேவேளை அனைத்து காலங்களிலும் இந்த நண்டு கிடைப்பதும் அரிது என்றுதான் சொல்லலாம்.
பாவனை முறைகள்
தொகு- குழம்பு வைத்து சாப்பிடுதல்
- தீயில் சுட்டு சாப்பிடுவது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Species Fact Sheet: Callinectes sapidus (Rathbun, 1896)". Food and Agriculture Organization. பார்க்கப்பட்ட நாள் November 28, 2010.