நீலபு ராமி ரெட்டி

இந்தியத் தடகள வீரர்

நீலபு ராமி ரெட்டி (Neelapu Rami Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1965 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் விரைவோட்டப் போட்டிகளில் பங்கேற்று தேசிய தடகள வெற்றியாளராகத் திகழ்ந்தார்.[1][2] 1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் முதல் பாதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக இவர் தேசிய போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார். 1994 ஆம் ஆண்டு போட்டி விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தென் மத்திய இரயில்வே அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இந்திய இரயில்வேயின் விரைவோட்டப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.[3]

நீலபு ராமி ரெட்டி
Neelapu Rami Reddy
1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டி, டாக்கா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்1 சூன் 1965 (1965-06-01) (அகவை 59)
பிறந்த இடம்பெதா வால்டேர், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா

வசந்தி ரெட்டி, மனைவி

புனித்து ரெட்டி & லலித்து ரெட்டி, மகன்கள்
வசிப்பிடம்ஐதராபாத்து
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Subba Rao remembered". தி இந்து. 31 August 2006 இம் மூலத்தில் இருந்து 11 November 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071111071358/http://www.hindu.com/2006/08/31/stories/2006083106872000.htm. பார்த்த நாள்: 6 May 2010. 
  2. "SAAP indifference leaves athletes high and dry". தி இந்து. 8 February 2008 இம் மூலத்தில் இருந்து 12 February 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212012405/http://www.hindu.com/2008/02/08/stories/2008020858310300.htm. பார்த்த நாள்: 6 May 2010. 
  3. "Overcoming all odds". தி இந்து. 14 May 2009 இம் மூலத்தில் இருந்து 6 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106024904/http://www.hindu.com/mp/2009/05/14/stories/2009051450130300.htm. பார்த்த நாள்: 6 May 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலபு_ராமி_ரெட்டி&oldid=3854417" இலிருந்து மீள்விக்கப்பட்டது