நீலமணி ராசு

இந்திய காவல்துறை அதிகாரி

நீலமணி என் இராஜு (Neelamani N Raju) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரியாவார். 1983 ஆம் ஆண்டு தொகுதி காவல் அதிகாரி தேர்வில் கர்நாடகா பிராந்தியத்திற்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கர்நாடக காவல்துறை பொது இயக்குநராகவும் கர்நாடக காவல்துறை பொது ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். கர்நாடக காவல் துறையில் தலைவராக இருந்த முதல் பெண் காவல்துறை அதிகாரி என்ற சிறப்புடன் நீலமணி சனவரி 31 அன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.[2][3]

20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதிநிதியாக இந்திய அரசுக்காக இவர் பணியாற்றியுள்ளார். நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில் தனது மாநிலப் பணிக்கு திரும்புவதற்கு முன்பு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் கூடுதல் இயக்குநராக பணியில் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bengaluru: Neelamani for new DGP post". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  2. "Neelamani Raju becomes first woman to helm Karnataka's police force". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2017-10-31. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  3. "Neelamani N Raju, 1983 batch IPS officer, becomes first woman to head Karnataka Police". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமணி_ராசு&oldid=3754941" இலிருந்து மீள்விக்கப்பட்டது