நீலம் பண்பாட்டு மையம்
நீலம் பண்பாட்டு மையம் (ஆங்கில மொழி: Neelam Culture Centre) என்பது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சமூக செயற்பாட்டு அமைப்பாகும். அம்பேத்கரிய கொள்கைகள் மையமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு இதை இயக்குநர் பா. ரஞ்சித் தொடங்கினார்.[1] இதழ் வெளியீடு, நூல் வெளியீடு, இசை நிகழ்ச்சிகள், ஆவணப்பட வெளியீடு, தலித் மாணவர்களுக்கு நிதிநல்கை போன்ற செயல்பாடுகளையும் அரசியல் கவனயீர்ப்புகளையும் செய்து வருகிறது.[2]
உருவாக்கம் | 2015 |
---|---|
நிறுவனர் | இயக்குநர் பா. ரஞ்சித் |
வகை | சமூக அரசியல் அமைப்பு |
தலைமையகம் |
செயல்பாடுகள்
தொகு- ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களை ஊக்குவிக்க வானம் கலைத் திருவிழா என்ற நிகழ்வை 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்துகிறது.[3]
- கலை இலக்கிய அரசியல் மாத இதழ் நீலம், நீலம் பதிப்பகம், வேர்ச்சொல் நிதிநல்கை போன்று பதிப்புத்துறையில் தலித்திய பார்வையில் இயங்கி வருகிறது.[4]
- மார்கழி மாதத்தில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சிகளை ஆண்டுதோறு நடத்தி வருகிறது.[5]
- தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற பெயரில் இசைக்குழுவை ஒருங்கிணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Geetha, V. The World Humanities Report From Theology to the Arts: Dalit Resistance Culture in Tamil Nadu (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 December 2024.
- ↑ "Members of Neelam Cultural Centre demand legislation against honour killings". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Coimbatore/members-of-neelam-cultural-centre-demand-legislation-against-alleged-honour-killings/article66747670.ece. பார்த்த நாள்: 12 December 2024.
- ↑ Ramesh, Akshaya (2019-01-02). "Vaanam Arts Festival: An education on the Dalit movement" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/vaanam-arts-festival-an-education-on-the-dalit-movement/article25888609.ece.
- ↑ "நீலம் இதழ்". அறிமுகம். பார்க்கப்பட்ட நாள் 12 December 2024.
- ↑ "நீலம் பண்பாட்டு மையம் என்றால் அரசாங்க சபாக்களில் கூட அனுமதி மறுக்கிறார்கள் - பா. ரஞ்சித்". புதியதலைமுறை. https://www.puthiyathalaimurai.com/cinema/if-is-a-neelam-cultural-center--they-refuse-permission-even-in-government-councils--pa-ranjith. பார்த்த நாள்: 12 December 2024.