தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்

இந்திய இசைக் குழு

தி காசுலசு கலெட்டிவ் (The Casteless Collective) என்பது தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைக்குழு ஆகும். பா. இரஞ்சித்து தொடங்கிய நீலம் பண்பாட்டு மைம் மற்றும் மதராசு இரெக்காடுசு என்ற முத்திரையில் இடென்மாவை நிறுவனராக கொண்டு தமிழ்-இண்டி இசைக்கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரின் ஆதரவுடன் 2017 ஆம் ஆண்டில் இந்த இசைக்குழு உருவாக்கப்பட்டது.[1][2]

தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்
பிறப்பிடம்தமிழ்நாடு, சென்னை
இசை வடிவங்கள்தமிழ்- இண்டி
இசைத்துறையில்2017 - தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்சுயாதீனமான
உறுப்பினர்கள்டென்மா
முத்து
பாசலச்சதர்
இசைவாணி
அறிவு
செல்லமுத்து
தரணி
சரத்
கௌதம்
நந்தன் கலைவாணன்
மனு கிருஷ்ணன்
சாகிப் சிங்

ஆரம்ப ஆண்டுகள் மற்றும் இசைக்குழு உருவாக்கம் தொகு

இசைக்குழுவின் தலைவரும் இசை தயாரிப்பாளருமான இடென்மா, 2017 ஆம் ஆண்டில் மதராசு இண்டி கலெட்டிவ் என்ற இசைக் கலைஞர்களை ஒரு குழுவாக இணைத்து நடத்திவந்தபோது, பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைம் சார்பாக 2017 இல் 'நானும் ஒரு குழந்தை' என்ற தலைப்பில் பழனிகுமார் ஒளிப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கானா பாடல்கள் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படிருந்தன. அப்போது பா. இரஞ்சித்ததுக்கு சமூக பிரச்சனைகளைப் பேச கானாவை அடிப்படையாக கொண்ட ஒரு இசைக்குழுவை உருவாக்கவேண்டும் என்ற ஒரு சிந்தனை உண்டானது. இதையடுத்து இடென்மாவுடன் கலந்துரையாடி அதன்படி சென்னையில் உள்ள கானா, பறை இசைக் கலைஞர்கள், சொல்லிசை, இராக்கு, சாசு என வெவ்வேறு இசைக் கலைஞர்களான 19 பேரைக் கொண்டு கொண்டு தி காசுலசு கலெட்டிவ் குழு உருவாக்கபட்டது.[3][4] இதன் முதல் மேடை ஏற்றம் 2018 சனவரி 6 அன்று நடந்தது.

இந்த இசைக்குழுவின் பெயரான தி காசுலசு கலெட்டிவ் என்பது 19 ஆம் நூற்றாண்டின் சாதி எதிர்ப்பு ஆர்வலரும் எழுத்தாளருமான அயோத்தி தாசரின் கோட்பாடான சாதி பேதமற்ற தமிழர்கள் என்பதிலிருந்து உருவானது. அவர் தமிழ்நாடு முழுவதும் தலித்துகளை சாதி இல்லாமல் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.[3] அயோத்தி தாச பண்டிதர் (1845-1914) 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் "சாதி பேதமற்ற தமிழர்கள்" என்ற சொற்றொடரை தனது தமிழ் இதழான தமிழனில் (1907-1914) வெளியிட்டதன் மூலம் முதன்முதலில் உருவாக்கினார்.[5]

இசைக்குழுவின் பாடல்களானது சாதி அமைப்பின் சமத்துவமின்மை, பெண்களும், சிறுபான்மையினரும் அரசால் ஒடுக்கப்படுவது போன்றவற்றிற்கு எதிராக கேள்விகேட்கின்றன.[6][7][8] தற்போதைய நிலையில இசைக்குழுவில் குழுவின் தலைவராக இசை தயாரிப்பாளர் இடென்மா உள்ளார். மேலும் இசைக் கலைஞர்களும் பாடகர்களுமாக முத்து, பாலச்சந்தர், இசைவாணி, அறிவு, செல்லமுத்து, தரணி (உடோலாக்கு), சரத் (சத்தி), கௌதம் (கட்ட மேளம்), நந்தன் கலைவாணன் (பறை மற்றும் தவில்), மனு கிருஷ்ணன் (செவிப்பறைகள் (drums) சாஹிப் சிங் (கித்தார்) ஆகியோர் உள்ளனர்.[3][9]

2019 நவம்பர் வரை, இசைக்குழு முப்பத்தைந்து பாடல்களை வெளியிட்டது.[10] 2020 ஆம் ஆண்டில் இசைக்குழுவில் உள்ள ஒரே பெண்மணியான கானா பாடகி, இசைவாணி, பிபிசியால் அவரது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார். பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண்களில் ஆளுமைகளில் ஒருவராக அவர் தேர்வுசெய்யபட்டார். ஏனென்றால் அவர் ஆண்களை ஆதிக்கம் செலுத்தும் ஒரு இடத்தில் நீண்ட காலமாக பாடியும், நிகழ்த்தியுள்ளதால் அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்துபவராக உள்ளார்.[11]

ஒற்றைப் பாடல்கள் தொகு

  • ஜெய் பீம் கீதம் - 2018 [12]
  • இட ஒதுக்கீடு - 2018 [6]
  • மகிழ்ச்சி - 2018
  • வட சென்னை - 2018
  • தலைவா - 2019
  • டப்பா டப்பா - 2019

இசைத் தொகுதிகள் தொகு

  • மகிழ்ச்சி - 2018 [13]

குறிப்புகள் தொகு

  1. "I wouldn't be here if it wasn't for Pa Ranjith, says music director Tenma". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
  2. Govindarajan, Vinita. "The Casteless Collective: A music band's debut has caught the attention of Chennai and the internet". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
  3. 3.0 3.1 3.2 T.M, Krishna. "Our music is about raw, primal instinct: The Casteless Collective". The Hindu. https://www.thehindu.com/entertainment/music/our-music-is-about-raw-primal-instinct/article26028183.ece. 
  4. "Want to add power to human dignity: Rapper Arivu on 'Vanakkam Virus' and his art". The news minute. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Leonard, Dickens. "The Caste-less Community". Academia.org. பார்க்கப்பட்ட நாள் 4 June 2019.
  6. 6.0 6.1 "The Casteless Collective is breaking caste boundaries with its music". Vice. https://www.vice.com/en_in/article/wjvyq9/the-casteless-collective-india-band-is-breaking-caste-boundaries-with-its-music. 
  7. Rao, Manasa. "Pa Ranjith's 'The Casteless Collective': A coming together of rock, rap, and gaana". The News Minute.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. Daksnamurthy, Aananth (2019-02-22). "IAS aspirant to auto driver — how Chennai's gully boys & girls fight inequality with music". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
  9. Senthalir, S. "An anti-caste collective challenges oppression through music". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-01.
  10. "Wake-up songs: Across the south, bands are using folk to rock the boat". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
  11. "Gaana singer Isaivani of The Casteless Collective on BBC's '100 Women 2020 list'". The News Minute (in ஆங்கிலம்). 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  12. Sriram, Abhinaya (2018-05-21). "Madras Medai: on stage, everyone’s equal" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/music/madras-meda-indie-music-concert/article23949846.ece. 
  13. Nath, Parshathy J. (2018-03-06). "The Casteless Collective: When equal voices sing for equality" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/society/the-casteless-collective-when-equal-voices-sing-for-equality/article22946201.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கேஸ்ட்லெஸ்_கலெக்டிவ்&oldid=3931244" இலிருந்து மீள்விக்கப்பட்டது