நீலம் (புதினம்)

நீலம் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிவரும் புதின வரிசையில் நான்காவது புதினமாகும். கிருஷ்ணனின் வாழ்க்கையையும் ராதையுடன் உள்ள உறவையும் சொல்கிறது

நீலம்
நூலாசிரியர்ஜெயமோகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுராண மறுபுனைவுப் புதினம்
வெளியீட்டாளர்கிழக்கு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2015
ஊடக வகைPrint
ISBN978-9384149246
முன்னைய நூல்வண்ணக்கடல்

பின்புலம்

தொகு

ஜனவரி1 ,2014 முதல் ஜெயமோகன் வெண்முரசு என்றபேரில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு புதினங்களை எழுதத் தொடங்கினார். இவை அவரது இணையதளத்தில் தொடராக வெளிவந்தன. www.venmurasu.in லும் இத்தொடர் வெளிவந்தது[1]. ஷண்முகவேல் வரையும் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. முதற்கனல் மழைப்பாடல் வண்ணக்கடல் ஆகிய புதினங்களுக்குப்பின் நீலம் வெளிவந்தது. ஆகஸ்ட் 20 முதல் செப்டெம்பர் 26 வரை 38 நாட்கள் தொடராக வெளிவந்தது இந்நாவல்.

கட்டமைப்பு

தொகு

மகாபாரதப் பின்னணி கொண்டிருந்தாலும் இப்புதினம் பெரும்பாலும் பாகவதத்தை ஒட்டியே எழுதப்படுகிறது. கண்ணன் ராதை உறவு ஜயதேவரின் அஷ்டபதியை அடிப்படையாகக் கொண்டது. ராதையின் பார்வை வழியாக கண்ணனின் கதையைச் சொல்லும் படைப்பு இது. ராதை குழந்தையாக கண்ணனைக் காண்பதில் தொடங்குகிறது. ராதைக்கும் கண்ணனுக்குமான உறவு ஒரு கதையோட்டமாகவும் கண்ணன் கம்சனைக்கொல்வது வரையிலான கதை இன்னொரு கதையோட்டமாகவும் சொல்லப்படுகிறது

எதுகைமோனையும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் கொண்ட நடையில் இப்புதினம் எழுதப்பட்டுள்ளது நற்றிணைப்பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பக வெளியீடும் உள்ளது[2].

குறிப்புகள்

தொகு
  1. "நீலம் venmurasu.in". பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
  2. "கிழக்கு பதிப்பக வெளியீடு". பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_(புதினம்)&oldid=4100150" இலிருந்து மீள்விக்கப்பட்டது