வண்ணக்கடல் (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வண்ணக்கடல் ஜெயமோகன் எழுதிய புதினம். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிவரும் புதின வரிசையில் மூன்றாவது படைப்பு இது. பாண்டவர்களின் இளமைப்பருவ வாழ்க்கையைச் சொல்கிறது
நூலாசிரியர் | ஜெயமோகன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | புராண மறுபுனைவுப் புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்கு பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2015 |
ஊடக வகை | |
ISBN | 978-9384149215 |
முன்னைய நூல் | மழைப்பாடல் |
அடுத்த நூல் | நீலம் |
பின்புலம்
தொகுஜனவரி 1, 2014 முதல் ஜெயமோகன் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு புதினங்களை எழுதத் தொடங்கினார். இவை அவரது இணையதளத்தில் தொடராக வெளிவந்தன. ஷண்முகவேல் வரையும் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. முதற்கனல், மழைப்பாடல் ஆகிய புதினங்களுக்குப்பின் வண்ணக்கடல் வெளிவந்தது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 நாட்கள் தொடராக வெளிவந்தது இந்நாவல்.
கட்டமைப்பு
தொகுஇப்புதினம் இளநாகன் என்ற கதாபாத்திரம் மதுரை மூதூரில் இருந்து அஸ்தினபுரியை நோக்கி வடதிசைப்பயணம் செய்யும் கதையை ஒரு கதையோட்டமாகச் சொல்கிறது. இளநாகன் பாண்டவர்களைப்பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தக்கதைகள் வெவ்வேறு சூதர்களால் சொல்லப்படுகின்றன. துரோணர் கர்ணன் ஏகலைவன் துரியோதனன் ஆகியோருடைய கதைகள் சொல்லப்படுகின்றன
நற்றிணைப்பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கிழக்கு பதிப்பகமும் இந்நூலை வெளியிட்டுள்ளது.