மழைப்பாடல் (புதினம்)

புதினம்

மழைப்பாடல் 'வெண்முரசு' என்னும் தலைப்பில் ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத புதின வரிசையின் இரண்டாவது புதினம். இது அம்பிகை அம்பாலிகை இருவருக்கும் திருதராஷ்டிரன், பாண்டு என்னும் மைந்தர்கள் பிறந்து அவர்கள் நடுவே அரசுரிமைப்போர் உருவாகி அவர்களுக்கு கௌரவர்களும் பாண்டவர்களும் பிறப்பது வரையிலான கதையைச் சொல்கிறது. இது முதன்மையாக மகாபாரதப்போருக்குக் காரணமாக அமைந்த பெண்களின் அக உலகைச் சொல்லும் படைப்பு

மழைப்பாடல்
நூலாசிரியர்ஜெயமோகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுராண மறுபுனைவுப் புதினம்
வெளியீட்டாளர்நற்றிணை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2014
முன்னைய நூல்முதற்கனல்
அடுத்த நூல்வண்ணக்கடல்

வரலாறு தொகு

வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதத்தொடங்கிய புதினம், 2014 ஜனவரி ஒன்றாம்தேதி தொடங்கியது. அதன் முதல் நாவலான முதற்கனல் பிப்ரவரி 19 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 24 அன்று மழைப்பாடல் என்ற பெயரில் அடுத்த நாவல் தொடங்கியது.

உள்ளடக்கம் தொகு

மழைப்பாடல் முதன்மையாக மகாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களின் கதை. சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை, குந்தி, காந்தாரி, சிவை என்னும் அரசகுலப்பெண்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே உருவான மோதலையும் நுட்பமான உளவியல் சிக்கல்களையும் விவரிக்கிறது. அதன் விளைவாக அஸ்தினபுரியின் அரசியலே எப்படி மாறியது என்று காட்டுகிறது. கூடவே இது மண்ணின் கதையும்கூட. காந்தார நாட்டின் பாலைவனம், யாதவர்களின் புல்வெளிகள், அஸ்தினபுரியின் நகரம், இமயமலை அடிவாரம் என பலவகையான நிலங்களை இது விவரிக்கிறது. அந்த நிலங்களுக்கிடையேயான போராக மகாபாரதத்தை காட்டுகிறது. அத்துடன் இது சூத்திர சாதியினர் ஒன்றுதிரண்டு சத்ரியர்களாக ஆவதற்கு முயல்வதையும் அதை ஒடுக்கமுயலும் சத்ரியர்களையும் காட்டி அந்தப் பூசலே மகாபாரதப் போராக ஆகியது என்று விவரிக்கிறது

வெளியீடு தொகு

இப் புதினத்தை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைப்பாடல்_(புதினம்)&oldid=3463251" இலிருந்து மீள்விக்கப்பட்டது