நீலாசோதையன்
(நீலாசோதையான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீலாசோதையான் என்பவர் வலவை நகரை ஆட்சி செய்த அரசர் பெரியதம்பிரானின் அரச சபையில் படைத்தளபதியாக இருந்துள்ளார், வண்ணார் குலத்தில் பிறந்த இவர், பாண்டியர்களை வென்று அவர்களின் படைகளில் 6000 வீரர்களை வென்று தன்னுடைய படையில் இணைத்து வைத்து தங்கள் நாட்டை ஆண்டுவந்துள்ளனர் என்பதை வரலாறு உணர்த்துகிறது.[1][2]
நீலாசோதையன் பற்றிய கோணேசர் கல்வெட்டு
தொகுநீலசோதையன் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது கோணேசர் கல்வெட்டின் 28 ஆம் பாடல்
“ | எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச் சுற்றாம் மரத்தை இனதா வெட்டி தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழ முன்னம் தரணி மீதில் ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன் அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதையன் படையும் அரசர்மாரும் என அமைந்துள்ளது |
” |
இதற்கான பொருள் விளக்கம் குளத்திற்காக காவல் இருக்கும் தெய்வம் தரப்பட்டுள்ளது எனினும் பாடலில் இக்குளத்தை அமைத்த நீலாசோதையன் படையும் அரசர்மாரும் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது,அதாவது குளக்கோட்டு மன்னனுக்காக கந்தளாய் குளத்தை அமைத்தது
நீலாசோதையன் படையும் அரசர்மாரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ வெல்லவூர்க் கோபால் (2005). மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம். மனு வேதா. p. 170,171.
அனுராதாபுரியின் தலைமை தளபதி நீலசோதையன்
- ↑ க.மகேஸ்வரலிங்கம் (1996). மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு அல்லது அறிமுகம். தில்லை வெளியீடு. p. 70,80.
மட்டக்களப்பில் பெரியதம்பிரான் தெய்வ வழிபாடுகளும் உண்டு
- ↑ https://lanka4.tv/news-view/12731/47[தொடர்பிழந்த இணைப்பு]