நீல்காந்த் ஆலார்ன்கர்
இந்திய அரசியல்வாதி
நீல்காந்த் ஆலார்ன்கர் (Nilkanth Halarnkar) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2007 மற்றும் 2017 கோவா சட்டமன்றத் தேர்தல்களில் முறையே தேசியவாத காங்கிரசு கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு ஆகிய கட்சிகளின் சார்பில் டிவிம் கோவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து கோவாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] 2019 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து நீங்கி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த 10 உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2][3]
நீல்காந்த் ஆலார்ன்கர் | |
---|---|
கோவாவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2007 | |
தொகுதி | டிவிம் |