நீல டிராகன் திரைப்பட விருதுகள்
நீல டிராகன் திரைப்பட விருதுகள் என்பது ஒவ்வொறு ஆண்டும் தென் கொரியாவில் வழங்கப்படும் விருதுகளாகும். இது ஸ்போர்ட்சு சோசன் நிறுவனத்தால் தென் கொரிய திரைப்படங்களின் சாதனைகளுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.
நீல டிராகன் விருதுகள் | |
---|---|
விளக்கம் | திரை ரீதியான சாதனைகளுக்கு வழங்கப்படும் விருது |
நாடு | தென் கொரியா |
வழங்குபவர் | ஸ்போர்ட்சு சோசன் |
முதலில் வழங்கப்பட்டது | 1963 |
இணையதளம் | http://www.blueaward.co.kr/ |
நீல டிராகன் திரைப்பட விருதுகள் வழங்கும் நிறுவனம், முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட வசூல் ரீதியாக சாதனை புரிந்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் உயர் கலை மதிப்புள்ள பிரபலமான திரைப்படங்களை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளும். தேர்வு செயல்பாட்டின் போது, இறுதி பட்டியலில் இடம் பிடித்த சுமார் நாற்பது திரைப்படங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு தேர்வையும் திரையிட்ட பிறகு, விருது வழங்கும் விழா நடைப்பெறுகிறது.
நீல டிராகன் திரைப்பட விருதுகள் மற்றும் கிராண்ட் பெல் விருதுகள் தென் கொரியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட விருதுகள்.[1][2]
பிரிவுகள்
தொகு- சிறந்த படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த முன்னணி நடிகர்
- சிறந்த முன்னணி நடிகை
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த புதிய இயக்குநர்
- சிறந்த புதிய நடிகர்
- சிறந்த புதிய நடிகை
- சிறந்த திரைக்கதை
- சிறந்த ஒளிப்பதிவு
- சிறந்த கலை இயக்கம்
- சிறந்த இசை
- சிறந்த படத்தொகுப்பு
- சிறந்த குறும்படம்
- பிரபல நட்சத்திர விருது
குறிப்புகள்
தொகு- ↑ "Blue Dragon Film Awards". YesAsia. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
- ↑ "The 27th Blue Dragon Awards". Tracking the Blue Dragon Dumplings. Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (கொரிய மொழி)
- Blue Dragon Film Awards at Naver (கொரிய மொழி)
- Blue Dragon Film Awards பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் at Daum (கொரிய மொழி)
- Blue Dragon Film Awards at Cinemasie
- ஐ.எம்.டி.பி இணையத்தில் நீல டிராகன் திரைப்பட விருதுகள்