நீலப் பென்னி
நீலப் பென்னி அல்லது மொரீசியசு "அஞ்சல் அலுவலகம்" அஞ்சல்தலைகள் (Mauritius "Post Office" stamps) என்பன, பிரித்தானியக் குடியேற்ற நாடான மொரீசியசினால் செப்டெம்பர் 1847ம் ஆண்டு இரண்டு பெறுமானங்களில் வெளியிடப்பட்டது. ஒன்று ஒரு பென்னி (1d) பெறுமானமுள்ள செம்மஞ்சள்-சிவப்பு நிறமானது, மற்றது இரண்டு பென்சு (2d) பெறுமானம் கொண்ட ஆழ்நீல நிறமானது. இந்த அஞ்சல்தலைகளில் "அஞ்சல் அலுவலகம்" என்னும் பொருள் தரும் "Post Office" என்னும் பொறிப்பு உள்ளது. இதனாலேயே இந்த அஞ்சல்தலைகளுக்கு மேற்குறித்த பெயர் ஏற்பட்டது. ஆனாலும், விரைவிலேயே இது "Post Paid." என்று மாற்றப்பட்டது. உலகின் மிக அரிதான அஞ்சல்தலைகளுள் இவையும் அடங்குகின்றன.
மொரீசியசு "அஞ்சல் அலுவலகம்" அஞ்சல்தலைகள் | |
---|---|
உற்பத்தியான நாடு | மொரீசியசு |
உற்பத்தியான தேதி | செப்டம்பர் 21, 1847[1] |
காட்டுவது | விக்டோரியா அரசி |
எப்படி அருமை | பெரிய பிரித்தானியாவுக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் பிரித்தானியப் பேரரசு அஞ்சல்தலை. |
இருப்பு எண்ணிக்கை | 27 (1981 நிலை)[2] |
முகப் பெறுமானம் |
|
மதிப்பீடு | $4 மில்லியன், இரண்டும் உறையுடன் (கடைசி விற்பனை, 1993) |
வரலாறு
தொகுஇந்த அஞ்சல்தலைகள் சோசப்பு ஓசுமாண்டு பர்னார்ட் என்பவரால் வரையப்பட்டது. 186ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் கப்பல்மூலம் 1838ல் மொரீசியசுக்கு வந்தார். இவற்றின் வடிவமைப்பு அக்காலத்தில் பெரிய பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்த விக்டோரியா அரசியின் தலையுடன் கூடிய அஞ்சல்தலையை அடிப்படையாகக் கொண்டது. முன்னர் குறிப்பிட்டபடி இரண்டு பெறுமானங்களில், இரண்டு நிறங்களில் இவை வெளியிடப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அஞ்சல்தலைகள் பண்படாத இயல்புகளைக் கொண்டிருந்தபோதும், இவை பார்னாடின் பெயரை மொரீசியசின் அஞ்சல் வரலாற்றில் அழியா நிலைக்கு உயர்த்தின.