நீள் கத்திகளுடைய இரவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) (ஜெர்மன்: Nacht der langen Messer (உதவி·தகவல்))
அல்லது முனகும் பறவையின் செயல் (Humming Bird) என்று கூறப்படும் இந்நிகழ்வு நாசி ஜெர்மனியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 ,1934, வரையிலுள்ள காலத்தின் இடையில் நாசி நிர்வாகத்தினரால் நடந்த நீக்குதல் நிகழ்வினால் பல ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ),ஊர்க்காவல் படைப்பரிவைச்சார்ந்த காவிச்சட்டையினர் அரசியல் கொலையுண்டனர். இந்நிகழ்வை இந்த சங்கேத வார்த்தைகொண்டு (ஹம்மிங் பேர்ட்) நாசிக்கள் அழைத்தனர். இச்செயல் அடால்ப் இட்லர் அந்தப் படைப்பிரிவின் தலைவர் எர்ன்ஸ்ட் ரோம் என்பவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அப்படைப்பிரிவினர் அதன் தலைமையாளருடன் தனித்து தன்னாட்சிப் பெற்ற பிரிவாக, பல தெருக்கலவரங்களிலும், ஆட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதே இட்லரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் ரெய்க்ஸ்வியர் எனப்படும் ஜெர்மன் இராணுவப்பிரிவில் பலர் துணை வேந்தராகிய பிரான்ஸ் வோன் பேப்பன் க்கு ஆதராவாக செயல்படுபவர்களை கண்டு களைந்தெடுக்கவும் இட்லர் இந்த செயல்களை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த செயல் மூலம் சுமார் 85 முதல் 100 வரையிலான உயிரிழப்புகள் மற்றும் 1000 க்கும் அதிகாமானோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்செயல்கள் சுத்ஸ்டாப்பெல் ( எஸ் எஸ்) படைப்பரிவைச்சார்ந்தவர்களாலும் மேலும் கிஸ்டாப்போ எனும் உளவுப் பிரிவு காவல்துறையினராலும் இது நிகழ்த்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்தவர் ஹைன்ரிச் ஹிம்லர். தன் உட்கட்சிப் பிரிவு செயல்பாடுகளாயிருந்தாலும் அவற்றை ஒடுக்க மனித உரிமைக்கு எதிரான செயல்களை பயன்படுத்துவதில் இட்லர் தயங்கியதில்லை என்பதற்கு இது சான்று. இந்த நிகழ்வின் மூலம் இட்லர் ஜெர்மானிய மக்களின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிபதியாக விளங்கினார்.
