நுகர்வோர் கடன்

நுகர்வோர் கடன் என்பது பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்காக பெறப்பட்டு, திரும்பி செலுத்தப்படாத கடன் ஆகும்.

அளவு

தொகு

நுகர்வுப் பண்பாடு நுகர்வின் அளவைப் பல்மடங்கு பெருக்கி உள்ளது. வீடு, வாகனம், உடை, ஆடம்பரங்கள், தளபாடங்கள், சுற்றுலா என எல்லாதரப்பட்ட பொருட்களும் சேவைகளும் கடன் வாங்கி நுகரப்படுகின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோர் கடன் பெருந்தொகையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நுகர்வோர் கடன் அதிகரித்து வருகிறது.

பொருளாதார விளைவுகள்

தொகு

ஒரு குறிப்பிட்ட அளவு நுகர்வோர் கடன் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்று என்று கூறப்படுகிறது. கடன் கிடைத்தால், நுகர்வோர் கூடிய பொருட்களையும் சேவைகளையும் நுகருவர். இவற்றை வழங்கள் வணிக நிறுவனங்கள் தமது உற்பத்தியைக் கூட்டும். ஆகவே ஒரு நாட்டின் உற்பத்தியை இது பெருக்கும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென் கொரியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு நுகர்வோர் கடன் அதிகரித்தமை இதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது.


அதிகரிக்கும் நுகர்வோர் கடன் பொருளாதார நெருக்கடையை தோற்றுவிக்கும். ஒரு நிலைக்கு மேல் ஒருவர் கடனுக்கான தவணை கட்டணங்களை திரும்ப செலுத்த முடியாமல் போகும். அதனால் அவர் bankruptcy செய்வார். இப்படி பலர் செய்தால், கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். மேலும் அவர்கள் கடன் தர மறுப்பர். எனவே நுகர்வோர் தமது நுகர்வை குறைப்பர். இது உற்பத்தியை வீழ்த்தும். ஐக்கிய அமெரிக்காவிலும், இதர மேற்குநாடுகளிலும் 2008, 2009 இல் இடம்பெறும் பொருளாதார பின்னடைவுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.


அளவுக்கு மீறிய நுகர்வும் எதிர்பாப்புகளும் வாழ்வின் மகிழ்ச்சியை அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எ.கா ஐக்கிய அமெர்க்காவில் கடந்த சில தசமங்களாக மகிழ்ச்சிநிலை சரிந்து வருகிறது (ஆதாரம் தேவை).

இவற்றையும் பாக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகர்வோர்_கடன்&oldid=1352585" இலிருந்து மீள்விக்கப்பட்டது