நுசுட்டைட்டு
ஆக்சைடு கனிமம்
நுசுடைட்டு (Nsutite ) என்பது (Mn4+1−xMn2+xO2-2x(OH)2x இங்கு x = 0.06-0.07) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் [3]. பெரும்பாலும் மாங்கனீசு படிவுகளில் நுசுடைட்டு காணப்படுகிறது. கானா நாட்டிலுள்ள ஒரு சிறிய நகரமான நுசுட்டாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காணப்படுவது அறியப்பட்டது. மந்தமான இக்கனிமம் 6.5-8.5 என்ற மோவின் அளவுகோல் கடினத்தன்மையும், 4.5 என்ற சராசரி ஒப்படர்த்தி மதிப்பும் பெற்றுள்ளது. துத்தநாக-கார்பன் மின்கலன்களில் எதிர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் செயற்கை மாங்கனீசு படிப்படியாக நுசுடைட்டு கனிமத்தை இடப்பெயர்ச்சி செய்து வருகிறது [3].
நுசுட்டைட்டு Nsutite | |
---|---|
மண்கலந்த மாங்கனீசு மடிப்பு | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Mn4+1−xMn2+xO2-2x(OH)2x where x = 0.06-0.07 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | அறுகோணப் படிகத்திட்டம் அறியப்படாத இடக்குழு |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நுசுட்டைட்டு கனிமத்தை Nsu[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ Mindat
- ↑ 3.0 3.1 3.2 http://www.webmineral.com/data/Nsutite.shtml Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.