நுட்ப எழுத்து

நுட்ப எழுத்து (Technical writing) தொழில்நுட்ப விடயங்களைப் பற்றிய எழுத்து ஆகும். பயனர் கையேடு, மாணவர் பாட நூல், ஆவணங்கள் என பலதரப்பட்ட நுட்ப எழுத்து வகைகள் உண்டு.

நுட்ப எழுத்தில் கலைச்சொற்கள், துறைசார் கருத்துருக்கள் முக்கிய இடம் பெறும். இவற்றை வாசகர் வகை அறிந்து தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். மேலும் நுட்ப எழுத்தில் சூத்திரம் (formula), அட்டவணை, விளக்க படம் (diagrams), பட்டியல், படம் ஆகிவற்றின் பயன்பாடும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பந்தி பந்தியாக எழுதி விளக்குவதை விட ஒரு வரைபடத்தின் உதவியுடன் சிறப்பாக விளக்கலாம். நிகழ்படம், இயங்குபடம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நுட்ப எழுத்தில் அறிவுபூர்வமான மதிப்பீடுகளுக்கு இடமுண்டு. ஆனால் மேலோட்டமான கருத்துரைகளை தவிர்ப்பது நன்று.

தமிழில் நுட்ப எழுத்துதொகு

அண்மைக்காலத்தில் தான் அறிவியல் நுட்பவியல் தகவல் தமிழில் பகிர வேண்டிய அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது. தற்போதுதான் தமிழில் நுட்ப எழுத்து வளர்ந்து வருகிறது.

இவற்றையும் காணுங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுட்ப_எழுத்து&oldid=2741981" இருந்து மீள்விக்கப்பட்டது