நுண்ணுயிர்த் தின்னி

(நுண்ணுயிர் தின்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நுண்ணுயிர்தின்னி அல்லது நுண்ணுயிர் உண்ணி அல்லது பாக்டீரியா உண்ணி அல்லது பாக்டீரியா விழுங்கி (Bacteriophages) என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கீயா போன்றவற்றில் தொற்றுக்களை ஏற்படுத்தி, அவற்றினுள்ளே பல்கிப்பெருகி, அவற்றைத் தாக்கும் தீநுண்மம் ஆகும். நாம் தமிழில் இதை பாவுண்ணி என சுருக்கி அழைப்போம். இது பல தீநுண்மங்களைப்போல ஒரு மரபணுவையும் உறைப்புரதத்தையும் கொண்டுள்ளது. இவைகளில் தலை பிரட்டைப்போலவும், நூல்பட்டி/இழை (பிலமண்ட்) போலவும் காணப்படுகிறது. இவைகள் பாக்டீரியாக்களைச் சார்ந்து தனது இனத்தை பெருக்கி கொள்கிறது.

நுண்ணுயிர்தின்னியின் வெளிப்புறத் தோற்றம்

வரலாறு

தொகு

கங்கை நதி மற்றும் யமுனை நதிகளில் குளிப்பவருக்கு தொழு நோய் கூட குணமாகும் என அறியப்பட்டன. அதற்கு காரணம் இவ் பாவுண்ணிகளே. இதை 1896ம் ஆண்டு, எர்னசுடு ஆன்புரி ஆங்கின் தான் அளித்த அறிக்கையில் மேலே குறிப்பிட்ட நதிகளுக்கு நோய் தடுப்பாற்றல் உள்ளது எனவும் அவை மிக நுண்ணிய துளைகளைக்கொண்ட வடிகட்டியிலும் கடந்து செல்கிறது எனவும் முதலில் முறையிட்டார். பின்பு, 1915ல் ப்ரெடரிக் த்வார்ட் என்னும் ஆங்கிலேய பாக்டீரியல் வல்லுநர், இதை ஒரு குறுகிய காரணி நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்கிறது என கண்டறிந்தார். தனியே பெலிக்ச் டி எரில், என்பவரும் 1917 ல் கண்டறிந்தார்.[மேற்கோள் தேவை]

வகைப்பட்டியல்

தொகு

இவைப்பெற்றிருக்கும் மரபணுக்களை வைத்து இவை வகைப்படுத்தப்பட்டன. இவைகளில் சில ஆர். என். ஏ மூலக்கூறுகளையும் சில டி.என்.ஏவையும் கொண்டு இருக்கின்றன.இவைகளில் இரிழைகளையும் சில ஓரிழைகளையும் கொண்டு காணப்படுகின்றன. இவைகளைக் கொண்டு வகைப்படுத்தி இவை மயொவிரிடே சைப்போவிரிடே, போடோவிரிடே எனப்பலவாறு உள. இவைகளின் உருவத்தைக்கொண்டும் வகைப்படுத்தப்பட்டவை சில.

இந்நுண்ணுயிர்த்தின்னி களிலிலேயெ, பாவுண்ணி யான நுண்ணுழையாள்த்தின்னிகளும், நீபாவுண்ணியான நீலப்பச்சைப்பாசியுண்ணிகளும் அடங்கும். இவை இரண்டும் ஒன்றில் வரும் ஆனால் நாம் பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

பலுகிப்பெருகல்

தொகு
 
இனப்பெருக்கம்
 
நுண்ணோக்கிப்படம்

இவை தானாக பெருகும் ஆற்றலற்றவைகளாக உள்ளன. இவை சில பாக்டீரியாக்களை சார்ந்து உள்ளன. இவைகளின் மரபணுவை உட்செலுத்தி அதனுடன் அனுப்பப்பட்ட சில புரதங்களின் துணை கொண்டும் இவை பலவாக பெருகுகின்றன. இவைகள் பெருகுவதற்குத் தேவையான நொதிகளை பாக்டீரியாக்களிடமிருந்து பெற்று தன் இனத்தை அதற்குள்ளேயே பெருக்குகின்றன. இவை பருவம் அடைந்ததும் பாக்டீரியாக்களை சிதைத்து வெளிவருகின்றன. இவ்வாறு சிதைத்து வெளிவரும் காலத்தைக்கொண்டு இவை இரு வகைப்படுகின்றன.

  1. உடன் சிதை பாவுண்ணி (lytic phage)
  2. பின் சிதை பாவுண்ணி (lysogenic phage)

உடன் சிதை பாவுண்ணி

தொகு

இவை பாக்டீரியாக்களுள் மரபணுவை செலுத்தியவுடன் பலுகி அதை சிதைத்து வெளிவரும். இதை உடன் சிதை சுழற்சி என்கிறோம். இது மிகக்குறுகிய கால அளவான 22 நாழிகையில் நிறைவேறும். இவை பாவுண்ணிகளின் மையப்பெருகும் முறையாகும். எடுத்துக்காட்டு T4 பாவுண்ணிகளாகும்.

பின் சிதை பாவுண்ணி

தொகு

இவை மரபணுவை உட்செலுத்தி அம்மரபணுவை பாக்டீரியாவின் மரபணுவுடன் இணைத்து அப்பாக்டீரியாவுடன் சேர்ந்து பலுகிப்பெருகும். காலம் கூடும்போது அவை சிதைத்து வெளிவரும். இதற்கு உதாரணம் λ பாவுண்ணிகளாகும்.

பயன்கள்

தொகு

இப்பாவுண்ணிகளை மரபணு உயிரியல் ஆய்விலும் மருத்துவத்தில் பாவுண்ணி மருத்துவம்/பாவுண்ணி சிகிச்சை (phage therapy) என பயன்படுகின்றன.

உசாத்துணைகள்

தொகு
  • Mc Grath S and van Sinderen D (editors). (2007). Bacteriophage: Genetics and Molecular Biology (1st ed.). Caister Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904455-14-1
  • Wommack, K. E.; Colwell, R. R. (2000). "Virioplankton: Viruses in Aquatic Ecosystems". Microbiology and Molecular Biology Reviews 64 (1): 69. doi:10.1128/MMBR.64.1.69-114.2000. PubMed
  • Félix d'Hérelle (1949). "The bacteriophage" (PDF). Science News 14: 44–59. Retrieved 2010-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிர்த்_தின்னி&oldid=3201450" இலிருந்து மீள்விக்கப்பட்டது